பொது செய்தி

தமிழ்நாடு

25 ஆண்டுகளுக்கு பிறகு கரூரில் தி.மு.க., வெற்றி

Added : மே 04, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் சட்டசபை தொகுதியில், 25 ஆண்டுகளுக்கு பிறகு, தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.கடந்த, 1952 முதல், 2016 வரை கரூர் தொகுதிக்கு, 15 முறை தேர்தல் நடந்துள்ளது. அதில், காங்., கட்சி, 1952, 1957, 1962, 1967, 2001 ஆகிய, ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க., 1977, 1980, 1984, 1991, 2006, 2011, 2016 ஆகிய ஏழு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க., 1971, 1989, 1996 ஆகிய, மூன்று தேர்தல்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த, 1989ல்

கரூர்: கரூர் சட்டசபை தொகுதியில், 25 ஆண்டுகளுக்கு பிறகு, தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.


கடந்த, 1952 முதல், 2016 வரை கரூர் தொகுதிக்கு, 15 முறை தேர்தல் நடந்துள்ளது. அதில், காங்., கட்சி, 1952, 1957, 1962, 1967, 2001 ஆகிய, ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க., 1977, 1980, 1984, 1991, 2006, 2011, 2016 ஆகிய ஏழு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க., 1971, 1989, 1996 ஆகிய, மூன்று தேர்தல்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த, 1989ல் எம்.ஜி.ஆர்., மறைவால் அ.தி.மு.க., பிளவுபட்டதால், தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. 1996ல் ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணம் உள்ளிட்ட, காரணங்களால் எழுந்த எதிர்ப்பு அலையால், தி.மு.க., வெற்றி பெற்றது. அப்போது, தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, வாசுகி முருகேசன், 2001ல் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற, காங்., கட்சியிடமும், 2006ல், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட செந்தில்பாலாஜியிடமும் தோற்றார். பிறகு, 2011, தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற, காங்., வேட்பாளர் ஜோதிமணி, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி யிடம் தோற்றார். கடந்த, 2016ல், தி.மு.க., கூட்டணியில், காங்., வேட்பாளர் பாங்க் சுப்ரமணியமும், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தோற்றார். கடந்த, 1996க்கு பிறகு, 25 ஆண்டுகளாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், கரூர் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர்களை வீழ்த்த முடியவில்லை. இந்நிலையில் கடந்த, 2006, 2011ல், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி தற்போது, தி.மு.க., சார்பில் போட்டியிட்டார். அ.தி.மு.க., சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டி யிட்டார். நேற்று முன்தினம் ஓட்டு எண்ணிக்கையின் போது, அ.தி.மு.க., வேட்பாளர் விஜயபாஸ்கர், துவக்கத்தில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். பிறகு, பின்தங்கி இறுதியில், தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் தோல்வியை தழுவினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X