பொது செய்தி

தமிழ்நாடு

சுயேச்சை வேட்பாளரால் சேந்தையில் அ.தி.மு.க., தோல்வி

Added : மே 04, 2021
Share
Advertisement
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், சுயேச்சை வேட்பாளரால், அ.தி.மு.க., வேட்பாளர் தன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியில், 1996ல், தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற சந்திரசேகரனுக்கு, 2006ல் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், அவர், அ.தி.மு.க.,வில் இணைந்தார். இங்கு, 2011ல் கூட்டணி கட்சியான, தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்பட்டதால், சந்திரசேகரனுக்கு வாய்ப்பு

சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், சுயேச்சை வேட்பாளரால், அ.தி.மு.க., வேட்பாளர் தன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.


நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியில், 1996ல், தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற சந்திரசேகரனுக்கு, 2006ல் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், அவர், அ.தி.மு.க.,வில் இணைந்தார். இங்கு, 2011ல் கூட்டணி கட்சியான, தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்பட்டதால், சந்திரசேகரனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2016ல், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின், இவரது செயல்பாடு கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, 2021ல் அ.தி.மு.க., சார்பில் சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, சுயேச்சையாக போட்டியிடப் போவதாக சந்திரசேகரன் அறிவித்தார். இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், சேந்தமங்கலம் தெகுதியில், தி.மு.க., வேட்பாளர் பொன்னுசாமி, அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரன், சுயேச்சை வேட்பாளர் சந்திரசேகரனுக்கும் கடும் போட்டி இருக்கும் என பேசப்பட்டது. கொல்லிமலையில் செல்வாக்கு இருப்பதால், கணிசமான ஓட்டுகளை சந்திரசேகரன் பெறுவார் என்றனர். தேர்தல் முடிவில், சந்திரனை விட, 10 ஆயிரத்து, 493 ஓட்டுகள் அதிகம் பெற்று, பொன்னுசாமி வெற்றி பெற்றார். 11 ஆயிரத்து, 371 ஓட்டுகள் பெற்று, சந்திரசேகரன் மூன்றாம் இடத்தை பிடித்தார். இந்த தேர்தலில் சந்திரசேகரன் சுயேச்சையாக போட்டியிடவில்லை என்றால், 900 ஓட்டுகள் அதிகம் பெற்று, சந்திரன் வெற்றி பெற்று இருப்பார். சுயேச்சை வேட்பாளரால், சேந்தமங்கலத்தில், அ.தி.மு.க., வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X