பொது செய்தி

தமிழ்நாடு

25 ஆண்டுகளுக்குப் பின் நாமக்கல் தொகுதியை கைப்பற்றிய தி.மு.க.,

Added : மே 04, 2021
Share
Advertisement
நாமக்கல்: கடந்த, 25 ஆண்டுகளுக்குப் பின், நாமக்கல் தொகுதியை, தி.மு.க., கைப்பற்றியுள்ளது.நாமக்கல் சட்டசபை தொகுதியில், 1951ல், ராமசாமி (இந்திய பொதுவுடமை கட்சி), 1957 ல், கொழந்தாகவுண்டர் (காங்.,), 1962ல், சின்னையன், (காங்.,), 1967ல், முத்துசாமி (தி.மு.க.,), 1971ல், பழனிவேலன் (தி.மு.க.,), 1977ல், அருணாசலம் (அ.தி.மு.க.,), 1980ல், அருணாசலம் (அ.தி.மு.க.,). மேலும், 1984ல், அருணாசலம் (அ.தி.மு.க.,), 1989ல், துரைசாமி (தி.மு.க.,), 1991ல், அன்பழகன்

நாமக்கல்: கடந்த, 25 ஆண்டுகளுக்குப் பின், நாமக்கல் தொகுதியை, தி.மு.க., கைப்பற்றியுள்ளது.


நாமக்கல் சட்டசபை தொகுதியில், 1951ல், ராமசாமி (இந்திய பொதுவுடமை கட்சி), 1957 ல், கொழந்தாகவுண்டர் (காங்.,), 1962ல், சின்னையன், (காங்.,), 1967ல், முத்துசாமி (தி.மு.க.,), 1971ல், பழனிவேலன் (தி.மு.க.,), 1977ல், அருணாசலம் (அ.தி.மு.க.,), 1980ல், அருணாசலம் (அ.தி.மு.க.,). மேலும், 1984ல், அருணாசலம் (அ.தி.மு.க.,), 1989ல், துரைசாமி (தி.மு.க.,), 1991ல், அன்பழகன் (அ.தி.மு.க.,), 1996ல், வைசாமி (தி.மு.க.,), 2001ல், ஜெயக்குமார் (காங்.,), 2006ல், ஜெயக்குமார் (காங்.,), வெற்றி பெற்றனர்.1977 முதல், 2006 வரை, தனித்தொகுதியாக இருந்த நாமக்கல் தொகுதி, 2010ல், தொகுதி மறுசீரமைப்புக்கு பின், பொதுத்தொகுதியாக மாறியது. அதையடுத்து, 2011ல், பாஸ்கர் (அ.தி.மு.க.), 2016ல், பாஸ்கர் (அ.தி.மு.க.,) வெற்றி பெற்றனர். தற்போது நடந்த தேர்தலில், நாமக்கல் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், சிட்டிங் எம்.எல்.ஏ., பாஸ்கர், மீண்டும் போட்டியிட்டார். தி.மு.க., சார்பில் ராமலிங்கம் போட்டியிட்டார். 1996க்கு பின், தி.மு.க., நேரடியாக களம் காணாமல், கூட்டணி கட்சிக்கே, தொகுதியை தாரை வார்த்து வந்தது.

இந்நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பின், அ.தி.மு.க.,வுடன், தி.மு.க., நேரடியாக மோதியது. அதனால், மூன்றாவது முறையாக வெற்றி பெற வேண்டும் என, அ.தி.மு.க.,வும், தொகுதியை கைப்பற்ற வேண்டும் என, தி.மு.க.,வும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. நேற்று முன்தினம் நடந்த ஓட்டு எண்ணிக்கையில், முதல் சுற்றில் இருந்தே, தி.மு.க.,வின் கையே ஓங்கி இருந்தது. குறைந்த ஓட்டில் இருந்த நிலையில், படிப்படியாக அதிகரித்து, 1,000க்கு மேல் அதிகம் பெற்று முன்னேறியது. இறுதியில், அ.தி.மு.க., வேட்பாளரை காட்டிலும், 27 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று, தி.மு.க., வெற்றியை பறித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X