பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக முதல்வரை தேர்ந்தெடுக்கும் கொல்லிமலை சென்டிமென்ட்

Added : மே 04, 2021
Share
Advertisement
சேந்தமங்கலம்: கொல்லிமலையில் தேர்வாகும் வேட்பாளர் ஆதரிக்கும் கட்சிதான், கடந்த, 30 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக உள்ளது.நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலமாக கொல்லிமலை உள்ளது. பல்வேறு சிறப்புகள் கொண்ட கொல்லிமலையில் இன்றளவும் சில அபூர்வ சக்திகள் உள்ளதாக கருதப்படுகிறது. மூலிகைகள், இங்குள்ள சிவன் கோவில் ஆகியவை பிரசித்தி பெற்றவை. வாசலூர்பட்டி ஏரியின் நடுவே

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் தேர்வாகும் வேட்பாளர் ஆதரிக்கும் கட்சிதான், கடந்த, 30 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக உள்ளது.


நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலமாக கொல்லிமலை உள்ளது. பல்வேறு சிறப்புகள் கொண்ட கொல்லிமலையில் இன்றளவும் சில அபூர்வ சக்திகள் உள்ளதாக கருதப்படுகிறது. மூலிகைகள், இங்குள்ள சிவன் கோவில் ஆகியவை பிரசித்தி பெற்றவை. வாசலூர்பட்டி ஏரியின் நடுவே அகற்றமுடியாத மண் திட்டு இன்றும் உள்ளது. இப்பகுதியில்தான் மரகத தேர் புதைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற முக்கியத்துவம் பெற்ற கொல்லிமலையில் அரசியல் திருப்பங்களும் உள்ளன. கொல்லிமலை ஒன்றியம், சேந்தமங்கலம் தொகுதியில் அடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளில், இரு தொகுதிகள் மட்டுமே மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு தொகுதிதான் சேந்தமங்கலம். கடந்த, 30 ஆண்டுகளாக கொல்லிமலை அமைந்துள்ள சேந்தமங்கலம் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் இடம் பெறும் கட்சிதான், தமிழகத்தை ஆளுங்கட்சியாக உள்ளது.

அதன்படி, 1991ல், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற சின்னுசாமி, 1996ல், தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற சந்திரசேகரன், 2001ல், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற கலாவதி, 2006ல், தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற பொன்னுசாமி, 2011ல் தே.மு.தி.க., சார்பில் வெற்றி பெற்ற சாந்தி, 2016ல், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற சந்திரசேகரன், 2021ல், தி.மு.க., சார்பில் வென்ற பொன்னுசாமி ஆகியோர் ஆதரவு கடிதம் கொடுத்தவர்கள்தான் தமிழகத்தின் முதல்வர்களாக உள்ளனர். அதேபோல், கொல்லிமலையில் ஆடிபெருக்கன்று நடக்கும் வல்வில் ஓரி விழாவில் அங்குள்ள வல்வில் ஓரி சிலைக்கு மாலையிடும் அரசியல் வாதிகள் பதவியை இழந்துவிடுகின்றனர் என்றும், அதிகாரிகள், பதவி மாற்றம் செய்யப்படுகின்றனர் என்ற நம்பிக்கையும் இன்றளவும் உள்ளது. இதனால், வல்வில் ஓரி விழாவுக்கு கலெக்டர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பதவியில் வகிப்பவர்கள் யாரும் மாலை போடுவதில்லை. இதுவும் கடந்த பல ஆண்டுகளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X