பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் மீண்டும் ஒரே ஒரு தி.மு.க.,- எம்.எல்.ஏ.,

Added : மே 04, 2021
Share
Advertisement
சேலம்: தமிழகம் முழுவதும், தி.மு.க., கூட்டணி கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றினாலும், சேலம் மாவட்டத்தில் கடந்த, 2016 தேர்தலை போன்று ஒரே ஒரு, தி.மு.க., வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.தமிழகத்தில், 2016ல், அ.தி.மு.க., அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. அதில், கொங்கு மண்டலத்தில் பெற்ற வெற்றி முக்கிய பங்கு வகித்தது. சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில், 10ல், அ.தி.மு.க.,

சேலம்: தமிழகம் முழுவதும், தி.மு.க., கூட்டணி கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றினாலும், சேலம் மாவட்டத்தில் கடந்த, 2016 தேர்தலை போன்று ஒரே ஒரு, தி.மு.க., வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.


தமிழகத்தில், 2016ல், அ.தி.மு.க., அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. அதில், கொங்கு மண்டலத்தில் பெற்ற வெற்றி முக்கிய பங்கு வகித்தது. சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில், 10ல், அ.தி.மு.க., வென்றது. சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ராஜேந்திரன் மட்டுமே, தி.மு.க.,- எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் கடந்த, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பார்த்திபன், 1.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெளியான தேர்தல் முடிவுகளில், தி.மு.க., 133 இடங்களை கைப்பற்றி, தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க உள்ளது. இருப்பினும் சேலம் மாவட்டத்தில், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. கடந்த, 2016ல், தி.மு.க., வெற்றி பெற்ற சேலம் வடக்கு தொகுதியில், அதே வேட்பாளரான ராஜேந்திரன் மட்டுமே மீண்டும் எம்.எல்.ஏ., ஆகியுள்ளார். மீதமுள்ள, 10 தொகுதிகளிலும், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் தோல்வியை தழுவியுள்ளனர். முதல்வர் பழனிசாமி தொகுதியில், அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த, தி.மு.க.,வினர் அதற்கான காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர். கடந்த, 2016 சட்டசபை தேர்தல் முடிவுகளே, மீண்டும் இந்த தேர்தலிலும் கிடைத்துள்ளதால், சேலம் மாவட்டத்தில், தி.மு.க., தனது நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X