பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் முன்னாள் முதல்வருடன் வெற்றி பெற்றவர்கள் ஆலோசனை

Added : மே 04, 2021
Share
Advertisement
சேலம்: தேர்தலில், அ.தி.மு.க., தோல்வியை சந்தித்ததையடுத்து, அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமியை, சேலத்தில் அவரது வீட்டில் நேற்று மாலை, முன்னாள் அமைச்சர்கள், வெற்றி பெற்றவர்கள் நேரில் சந்தித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டுக்கு கடந்த ஏப்.,28 காலை, 10:00 மணிக்கு வந்த பழனிசாமி, கொரோனா தொற்று

சேலம்: தேர்தலில், அ.தி.மு.க., தோல்வியை சந்தித்ததையடுத்து, அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமியை, சேலத்தில் அவரது வீட்டில் நேற்று மாலை, முன்னாள் அமைச்சர்கள், வெற்றி பெற்றவர்கள் நேரில் சந்தித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டுக்கு கடந்த ஏப்.,28 காலை, 10:00 மணிக்கு வந்த பழனிசாமி, கொரோனா தொற்று காரணமாக நிர்வாகிகள் சந்திப்பதை தவிர்த்து வந்தார். ஓட்டு எண்ணிக்கையை முடியும் நிலையில், மே, 2 இரவு, 8:30 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்ல திட்டமிட்டு இருந்தார். ஓட்டு எண்ணிக்கையில், அ.தி.மு.க., தோல்வியை சந்தித்ததை அடுத்து, தனது சென்னை பயணத்தை ரத்து செய்தார். நேற்று காலை தன் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார். நேற்று மாலை, 4:00 மணிக்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், கே.பி., அன்பழகன், முனுசாமி, ராமசந்திரன், சீனிவாசன், எம்.எல்.ஏ., திருப்பரங்குன்றம் ராஜன் செல்லப்பா உட்பட தேர்தலில் வெற்றி பெற்ற, 18 பேர் சந்தித்தனர். அவர்களுடன், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க.,வின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. எதிர்க்கட்சி தலைவர் தேர்வு குறித்து தற்போது பேச வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X