பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்தூரில் கொரோனா தொற்றுக்கு இருவர் பலி

Added : மே 04, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூரில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இருவர் பலியாகினர். சேலம் மாவட்டம், ஆத்தூர் சடகோபன் தெருவை சேர்ந்த, 73 வயது மூதாட்டி கடந்த, ஏப்., 28ல், கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியதால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்தார். அதேபோல் ஆத்தூர் கோவிந்தன் தெருவை சேர்ந்த, 63 வயது ஆண். இவர், மத்திய அரசின் ஊழியாக பணிபுரிந்து வந்தார். கடந்த ஏப்.,

ஆத்தூர்: ஆத்தூரில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இருவர் பலியாகினர். சேலம் மாவட்டம், ஆத்தூர் சடகோபன் தெருவை சேர்ந்த, 73 வயது மூதாட்டி கடந்த, ஏப்., 28ல், கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியதால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்தார். அதேபோல் ஆத்தூர் கோவிந்தன் தெருவை சேர்ந்த, 63 வயது ஆண். இவர், மத்திய அரசின் ஊழியாக பணிபுரிந்து வந்தார். கடந்த ஏப்., 29ல், கொரோனா தொற்று ஏற்பட்டு, ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்தார். மேலும், ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று, 40, 45 வயது ஆண் என, இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், அனைத்து அலுவலர், பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்துது. இதுகுறித்து, ஆத்தூர் நகராட்சி சுகாதார அலுவலர்கள் கூறியதாவது: ஆத்தூர் நகரில் கடந்த மார்ச், 8 முதல், இன்று (நேற்று) வரை, 116 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 69 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 41 பேர் குணமடைந்துள்ளனர்; இரண்டு பெண்கள் உள்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X