பொது செய்தி

தமிழ்நாடு

வடமாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்: ரூ.200 கோடி மதிப்பு கயிறுகள் தேக்கம்

Added : மே 04, 2021
Share
Advertisement
சேலம்: கொரோனா இரண்டாவது அலை பரவலால், வடமாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு எதிரொலியாக, சேலம், தர்மபுரி உட்பட தமிழகம் முழுவதிலும், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கயிறுகள் தேக்கம் அடைந்துள்ளன.சேலம், தர்மபுரி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் செயல்படும், 1,120 கயிறு உற்பத்தி கூடங்களில், 1.10 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் கயிறுகள்

சேலம்: கொரோனா இரண்டாவது அலை பரவலால், வடமாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு எதிரொலியாக, சேலம், தர்மபுரி உட்பட தமிழகம் முழுவதிலும், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கயிறுகள் தேக்கம் அடைந்துள்ளன.


சேலம், தர்மபுரி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் செயல்படும், 1,120 கயிறு உற்பத்தி கூடங்களில், 1.10 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் கயிறுகள் மஹாராஷ்டிரா, டில்லி, மத்தியபிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்வது வழக்கம். கொரோனா இரண்டாவது அலை பரவலால், வடமாநிலங்களில் ஏப்.,25 முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதே நேரத்தில் கர்நாடகாவிலும், ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கயிறு விற்பனைக்கு செல்வது முற்றிலும் தடைபட்டுள்ளது. தமிழகத்தில், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கயிறுகள், உற்பத்தி கூடங்கள், குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன.

இது குறித்து, சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த கயிறு மொத்த வியாபாரி சாகுல் ஹமீது கூறியதாவது: தமிழகத்தில் இருந்து குறிப்பாக, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் இருந்து மாதத்துக்கு, 125 கோடி ரூபாய் மதிப்புள்ள கயிறுகள் விற்பனைக்கு செல்லும். மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு, 60 சதவீத கயிறுகள் விற்பனைக்கு செல்வது வழக்கம். கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி கடந்த ஏப்.,20 முதல், வடமாநில மொத்த வியாபாரிகள் கயிறுக்கான ஆர்டரை நிறுத்தி விட்டனர். இதனால் தமிழகம் முழுவதும், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கயிறுகள் தேக்கம் அடைந்துள்ளதால், உற்பத்தி முற்றிலும் தடைபட்டுள்ளது. கயிறு உற்பத்தி, அதனை சார்ந்த உப தொழில்களில் ஈடுபட்டு வந்த, 1.10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால், மத்திய, மாநில அரசுகள், நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X