பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு: கொரோனா நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு பரிந்துரை

Added : மே 04, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் அறவே இல்லாத காரணத்தால், நோயாளிகளை வெளியேற்றும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.சேலம், சங்ககிரி மெயின் ரோடு அன்னதானப்பட்டி, போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே தனியார் மருத்துவமனை உள்ளது. அங்கு, 25க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று தீவிரமாகி நுரையீரல் பாதித்த, மூச்சுத்திணறல் நோயாளிகளுக்கு

சேலம்: சேலம், தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் அறவே இல்லாத காரணத்தால், நோயாளிகளை வெளியேற்றும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.


சேலம், சங்ககிரி மெயின் ரோடு அன்னதானப்பட்டி, போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே தனியார் மருத்துவமனை உள்ளது. அங்கு, 25க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று தீவிரமாகி நுரையீரல் பாதித்த, மூச்சுத்திணறல் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன், சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, இதுவரை இல்லாத அளவில், ஆக்சிஜன் சிலிண்டர் கடும் தட்டுப்பாடு காரணமாக சிகிச்சை தொடர்வது, கேள்விகுறியாகிவிட்டது. அதனால், வேறுவழியின்றி நோயாளிகளை வெளியேற்றும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, சேலம் அரசு மருத்துவமனைக்கு, வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, வெகுவாக அதிகரித்து வருகிறது. தனியார் மருத்துவமனை டாக்டர் பிரவீன் கூறியதாவது: எங்களுக்கு தினசரி, 60 ஆக்சிஜன் சிலிண்டர் தேவை. ஆனால், 25 சிலிண்டர் மட்டுமே சப்ளை செய்யப்பட்டுள்ளதால், போதிய அளவில் நோயாளிகளுக்கு செலுத்த முடியாத இக்கட்டான நிலை. எனவே பாதிப்பை தடுக்க, 25 நோயாளிகளை அரசு மற்றும் இதர மருத்துவமனைக்கு பரிந்துரைத்து விட்டோம். பிரச்னையை சமாளிக்க, எங்களுக்கு வேறுவழி தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் கலெக்டர் ராமன் கூறியதாவது: ஜே.எஸ்.டபுள்யூ கம்பெனி மூலம், வெளி மாநிலத்தில் இருந்து, கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால், இன்று ( மே 3) இரவுக்குள் ஆக்சிஜன் சப்ளை ஆகிவிடும். இன்னும், இரு நிறுவனங்கள் மூலமும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் நாளை (இன்று) ஆக்சிஜன் தட்டுப்பாடு நீங்கி விடும். இனி, பெரிய தனியார் மருத்துவமனைகள், ஆக்சிஜன் பிளான்ட் நிறுவி, தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்து, நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டும். அப்போது தான், அவசரகால பாதிப்பை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X