பொது செய்தி

தமிழ்நாடு

746 ஓட்டுகள் வித்தியாசத்தில் போராடி வென்ற துரைமுருகன்

Added : மே 04, 2021
Share
Advertisement
வேலூர்: தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன், வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில், தற்போது, 10வது முறையாக போட்டியிட்டார். அ.தி.மு.க., வேட்பாளர் ராமு அவருக்கு ஈடு கொடுத்து பிரசாரத்தில் ஈடுபட்டார். தொகுதியில், 349 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுக்கள், 23 சுற்றுகளாக எண்ணும் பணி, காட்பாடி சட்டக்கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. எட்டு சுற்றுக்கள் வரை, 6,500

வேலூர்: தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன், வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில், தற்போது, 10வது முறையாக போட்டியிட்டார். அ.தி.மு.க., வேட்பாளர் ராமு அவருக்கு ஈடு கொடுத்து பிரசாரத்தில் ஈடுபட்டார். தொகுதியில், 349 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுக்கள், 23 சுற்றுகளாக எண்ணும் பணி, காட்பாடி சட்டக்கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. எட்டு சுற்றுக்கள் வரை, 6,500 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், ராமு முன்னணியில் இருந்தார். ஒன்பது முதல், 20 சுற்றுக்கள் வரை, 500, 800 என்ற எண்ணிக்கையில் துரை முருகன் முன்னேறினார். பின், 21 முதல் 25 வரை மீண்டும் ராமு முன்னிலைக்கு சென்றார். இதனால் தி.மு.க., அ.தி.மு.க.,விடையே, 346 ஓட்டு வித்தியாசம் மட்டுமே இருந்தது. மற்ற இடங்களில் தி.மு.க., முன்னிலையில் பெற்றிருந்த நேரத்தில் காட்பாடியில் பின்னடைவை சந்தித்தது, அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது ஒட்டு எண்ணிக்கையின்போது பழுது ஏற்பட்டதால், ஐந்து கன்ட்ரோல் யூனிட்டுக்கள் மற்றும் மாதிரி ஓட்டுப்பதிவில் அழிக்காமல் இருந்த, கன்ட்ரோல் யூனிட் ஆகியவற்றின் ஓட்டு எண்ணிக்கையை நடத்தும்படி, அ.தி.மு.க.,வினர் கூறினர். முதலில் தபால் ஓட்டுக்களை எண்ணி விட்டு, பிறகு பழுதடைந்ததை சரி செய்து எண்ணும்படி, தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்தனர். இதனால் தபால் ஓட்டுக்கள் எண்ணிய பிறகே, ஐந்து யூனிட்டுக்களின் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில், 746 ஓட்டுக்கள் முன்னிலையில் துரைமுருகன் இருந்தார். மாதிரி ஓட்டுப்பதிவு யூனிட்டில் பதிவான ஓட்டுக்கள், இதைவிட குறைவாக இருந்ததால், அதை எண்ணும் பணியை கை விட்டனர். இதனால், 746 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X