பொது செய்தி

இந்தியா

கொரோனா 2ம் அலை: அதிகரிக்கும் வேலை இழப்பு

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. தினமும் 3 லட்சம் பேர் புதிதாக வைரஸ் தொற்றிற்கு ஆளாகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இதனால், முறைசார தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர். குறிப்பாக முன் எப்போதும் இல்லாத வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலையின்மையின்

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. தினமும் 3 லட்சம் பேர் புதிதாக வைரஸ் தொற்றிற்கு ஆளாகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இதனால், முறைசார தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர். குறிப்பாக முன் எப்போதும் இல்லாத வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலையின்மையின் விகிதம் 8 சதவீதத்தை எட்டியுள்ளது. வைரசின் தாக்கம் அதிகரிப்பதால், வேலையின்மையின் விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.



latest tamil news



இதுகுறித்து, சென்டர் பார் மானிட்டரிங் இந்தியன் எகனாமி பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் இந்தியாவில் வேலையின்மை மார்ச் மாதத்தில் 6.5 சதவீதமாக இருந்தது. தொற்று அதிகரித்துள்ளதால் ஏப்ரலில் 7.97 சதவீதமாக அதிகரித்துள்ளது. வைரஸ் இன்னும் தீவிரமாகப் பரவுவதால் மே மாதத்தில் வேலையிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, 70 லட்சம் பேர் வேலை இழப்பை சந்திக்கவுள்ளனர்' எனத் தெரியவந்துள்ளது.


latest tamil news



'ஊரடங்கின் காரணமாக முறைசாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய வேலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதைப் பொருட்படுத்தவில்லை என்றால் நாட்டில் தொழிலாளர்களின் இடப் பெயர்வு அதிகரிக்கும். பஞ்சமும் பட்டினிச் சாவும் ஏற்படும். கொரோனா தொற்றும் அதிகரிக்கும்' என, பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
04-மே-202121:27:49 IST Report Abuse
g.s,rajan எல்லாருக்கும் தெரியும் வேலையே இல்லாமல் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று ,சும்மா இருந்து பார்த்தால் தான் அதன் கஷ்டம் அரசாங்கத்துக்குத் தெரியும் ,வேலை பார்ப்பவர்களின் தற்போதைய சூழல் மிக மிக கடினமானது ,சமீப காலமாக வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு. அதாவது மிகவும் கடினம் . அந்த வேலையில் தொடர்ந்து தாக்குப் பிடிப்பது அதை விட மிகக் கடினம். ஜி.எஸ்.ராஜன்சென்னை .
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
04-மே-202118:30:34 IST Report Abuse
கொக்கி குமாரு இனிவரும் எதிர்காலங்களில் வேலை இழப்பை சரிசெய்ய ஒரே வழி வீட்டுக்கு ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளவும். இதற்கும் மூர்க்கர்கள் யாராவது அதை நீ எப்படி சொல்லலாம் என்று கேட்பார்கள். ஆனால் சீனா சொன்னால் அங்கு போய் வாய் சவடால் விடமாட்டார்கள்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-மே-202117:42:19 IST Report Abuse
g.s,rajan வேலை வாய்ப்பு ஏற்கனவே இல்லாத சூழலில் மேலும் அதிகரித்து வரும் வேலை இழப்பு சமூகப் பொருளாதாரத்தை சீர் குலைக்கும்,சமூகப் பொருளாதாரக் குற்றங்கள் அதிகரிக்கும் .வருமானம் இல்லாத பொழுதில் படித்தவர்கள் கூட கொலை கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபடுவார்கள் ,தன்னைக் காப்பற்ற,பெற்றவர்களைக் காக்க ,குழந்தை குட்டிகளைக் காக்க அத்யாவசிய செலவுகளை ஈடு கட்ட ,கடனைக் கட்ட ,வட்டி கட்ட எல்லாவற்றிற்கும் பணம் தேவைப்படுகிறது ,எனவே நிரந்தரமற்ற சூழலில் வேலை பார்ப்பவர்கள் திருட ஆரம்பித்துவிடுவார்கள் இது சமூகத்தைச் சீர்குலைக்கும் .பேராபத்து நிச்சயம் இந்தியாவிற்கு காத்திருக்கு . ஜி.எஸ்.ராஜன் சென்னை ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X