வங்கத்திற்கு பங்கம் விளைவிக்கிறதா வன்முறை? : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின்பு நடக்கும் வன்முறைகள் அம்மாநிலத்தில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் ஆங்காங்கே நடக்கும் வன்முறை சம்பவங்களை குறிப்பிட்டு டுவிட்டரில் பகிர்ந்து வருவதால் இந்த விவகாரம் டிரெண்ட் ஆனது. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து, முடிவுகளும் வெளியாகிவிட்டன. மூன்றாவது
BengalBurning, ShameOnTMC, Shamemamatabannerjee, BengalViolence,

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின்பு நடக்கும் வன்முறைகள் அம்மாநிலத்தில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் ஆங்காங்கே நடக்கும் வன்முறை சம்பவங்களை குறிப்பிட்டு டுவிட்டரில் பகிர்ந்து வருவதால் இந்த விவகாரம் டிரெண்ட் ஆனது.


தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து, முடிவுகளும் வெளியாகிவிட்டன. மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றி உள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி. அதேசமயம் இவர் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியை தழுவினார். இவரின் தோல்வியை அடுத்து அந்த தொகுதியிலும், மாநிலத்தில் பல ஊர்களிலும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.


வன்முறை சம்பவங்கள்


குறிப்பாக பா.ஜ. தொண்டர்களையும், எதிர்க்கட்சியினரையும் குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே பா.ஜ., அலுவலகம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீ வைப்பு சம்பவமும் அங்கு நிகழ்ந்தது. தற்போது தொடர்ந்து பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக சமூகவலைதளங்களில் பலரும் வீடியோவுடன் பகிர்ந்து வருகின்றன.

குறிப்பாக பா.ஜ., அவரது ஆதரவாளர்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் ஹிந்துக்களை குறிவைத்து வன்முறை சம்பவங்கள் நிகழ்வதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றன. அதேப்போன்று திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள், வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதுபோன்ற வன்முறை சம்பவங்களால் மாநிலத்தில் ஒரு விதமான பதட்டமான சூழல் உருவாகிறது. இதுபோன்ற சம்பவங்களை பலரும் சுட்டிக்காட்டி சமூகவலைதளமான டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதன்காரணமாக டுவிட்டரில், #BengalBurning, #ShameOnTMC, #Shamemamatabannerjee, #BengalViolence, உள்ளிட்ட பல ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின. இதில் பதிவான சிலரின் கருத்துக்கள்....


latest tamil news
* இது தான் ஆரம்பம், இன்னும் இவர்களின் ஆட்டம் அதிகரிக்கும். ஓட்டு போட்டு மம்தாவை ஜெயிக்க வைத்த மக்களே உங்களுக்கு வாழ்த்துக்கள்

* மேற்கு வங்கத்தில் ஏற்கனவே சுகாதாரம் சுமையாக உள்ளது. இப்போது இதுபோன்ற வன்முறைகளால் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்புவதன் மூலம் இன்னும் சுமையை தர போகிறோம். பொருளாதாரம் நலிவடைந்துள்ள நிலையில் கடைகளை உடைத்து கொள்ளையடித்து செல்கிறார்கள். மாநிலத்தில் எங்கே சட்ட ஒழுங்கு உள்ளது.

* கவர்னர் அவர்களே, மேற்கு வங்க மாநிலத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் தங்கள் கவனத்திற்கு நிச்சயம் வந்திருக்கும். தயவு செய்து உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஏதாவது செய்யுங்கள். முடிந்தால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர முடியுமா என்று பாருங்கள்.

* தற்போது மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்களை பார்க்கும்போது ஏன் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரக்கூடாது. தயவு செய்து அங்குள்ள அப்பாவி மக்களை காப்பாற்றுங்கள்.

* கடைகளை அடித்து நொறுக்குகிறார்கள், பெண்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள், கடைக்குள் புகுந்து கொள்ளையடித்து செல்கிறார்கள். சில வீடியோக்களில் டிஎம்சி., வன்முறையாளர்கள் தாக்கப்பட்டதால் மரணம் கூட அடைந்திருப்பதாக கூறுகிறார்கள். மம்தா பானர்ஜி உங்களை நினைக்கையில் மிகவும் அவமானமாக உள்ளது.

* தயவு செய்து மேற்கு வங்க மக்களை காப்பாற்ற ஏதாவது நடவடிக்கை எடுங்கள் மத்திய அரசே. மம்தா ஆதரவாளர்களின் வன்முறையால் தினம் ஒருவர் மடிந்து வருகிறார். எங்களை காப்பாற்றுங்கள்.

* கொரோனவால் நாடு என்ன நிலையில் சிரமப்பட்டு வருகிறது என்பதை கொஞ்சம் கூடி புரியாமல் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார் மம்தா.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
05-மே-202109:38:32 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM பி ஜி பி மட்டும் தான் அப்பாவிகள் வன்முறை என்றால் என்ன வென்று தெரியாதவர்கள் எப்படியும் மம்தாவை சி எம் அக்கா அவர்கள் விட மாட்டார்கள்
Rate this:
Cancel
05-மே-202106:09:17 IST Report Abuse
Naushad Babjohn திரிபுராவில் பஜக செய்யாததையா செய்துள்ளார்கள். Every action theres is equal and opposite reaction. thats all.
Rate this:
Cancel
Kumar TT -  ( Posted via: Dinamalar Android App )
04-மே-202122:13:01 IST Report Abuse
Kumar TT வன்முறைகள் நடப்பதை பார்ப்பதற்கு அறுவெறுப்பாகவும் வெட்கமாகவும் உள்ளது இங்கே உலகை வென்ற ஶ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சரும் மற்றும் விவேகாநந்தரும் பிறந்தனர் என்பதை நம்ப மறுக்கிறது மனது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X