அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., எம்.எல்.எல்.,க்கள் கூட்டம் துவங்கியது

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை: தி.மு.க., எம்.எல்.ஏ..,க்கள் துவங்கியது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் நாளை (மே.5) 6.30 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். இன்று மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சற்று முன் துவங்கியது. இதில் ஸ்டாலின் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதனை தொடர்ந்து நாளை
தமிழகம்,தரமான, சிகிச்சை, ஸ்டாலின்

சென்னை: தி.மு.க., எம்.எல்.ஏ..,க்கள் துவங்கியது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் நாளை (மே.5) 6.30 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

இன்று மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சற்று முன் துவங்கியது. இதில் ஸ்டாலின் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதனை தொடர்ந்து நாளை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். மே.7 அன்று கவர்னர் மாளிகையில் காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் ஒவ்வொரு அமைச்சருக்கும் 5 முதல் 8 பாஸ்கள் மட்டுமே வழங்கப்படும். மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.


தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்


இதற்கிடையில் தலைமைச்செயலாளர், சுகாதார செயலாளர் ஆகியோருடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில், மேலும் ஸ்டாலின் அறுவுறுத்தியதாவது:


latest tamil news



கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும். மக்களுக்கு எந்தவித தடையும் இன்றி மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். மருத்துவமனைகளில், மருந்து, ஆக்ஸிஜன் இருப்பு, படுக்கைவசதிகள் ஆகியவற்றின் இருப்பை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramouli - Mumbai,இந்தியா
04-மே-202119:23:15 IST Report Abuse
Chandramouli பதவி பிரமாணம் படிக்கும் போதாவது தப்பு தவறு இல்லாமல் ஸ்டாலின் படிக்கட்டும் .
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-மே-202119:18:59 IST Report Abuse
தமிழவேல் 200 பாஸ்கள் அதிகம்... தேவையற்றது.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மே-202119:18:50 IST Report Abuse
தல புராணம் கூட்டமா வரறதை பாத்தா இந்த நேரத்திலேயும் மாஸ்க்கை சரியாப் போடாத தற்குறிகளை பாருங்க.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
05-மே-202102:16:59 IST Report Abuse
தல புராணம்இடைத்தேர்தல் வந்திருமோன்னு பயம்மா இருக்கு. இவனுங்களுக்கு இல்லையே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X