பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வருகை

Added : மே 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்துள்ளது.தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால் மக்கள் தடுப்பூசி
Tamilnadu, Covishield, CovidVaccine, Covaxine, தமிழகம், கோவிஷீல்டு, கோவாக்சின், தடுப்பூசி, வருகை

சென்னை: மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால் மக்கள் தடுப்பூசி போடமுடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 60 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசிகள் வழங்குமாறு தமிழக அரசு சமீபத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்தி கடிதம் அனுப்பியிருந்தது.


latest tamil news



இந்நிலையில், இன்று (மே 4) காலை ஐதராபாத்தில் இருந்து 75 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழகம் வந்தடைந்தது. விமானம் மூலம் தமிழகம் வந்த தடுப்பூசிகள், கண்டெய்னர் வாகனம் மூலம் தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பிற்பகலில் மும்பையில் இருந்து விமானம் மூலம் மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் தமிழகம் வந்தடைந்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
... - ,
04-மே-202116:56:15 IST Report Abuse
... இதுல எவ்வளவு திருட போறாங்க ன்னு தெரியல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X