பொது செய்தி

இந்தியா

மே. வங்கத்திடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

Added : மே 04, 2021
Share
Advertisement
புதுடில்லி : மேற்கு வங்கத்தில், தேர்தல் முடிவுகளுக்கு பின் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்த அறிக்கையை, மாநில அரசிடம், மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.மேற்கு வங்கத்தில், 292 சட்டசபை தொகுதிகளுக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, பல இடங்களில் வன்முறைகள் அரங்கேறின. ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள, பா.ஜ., அலுவலகத்திற்கு,

புதுடில்லி : மேற்கு வங்கத்தில், தேர்தல் முடிவுகளுக்கு பின் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்த அறிக்கையை, மாநில அரசிடம், மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.

மேற்கு வங்கத்தில், 292 சட்டசபை தொகுதிகளுக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, பல இடங்களில் வன்முறைகள் அரங்கேறின. ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள, பா.ஜ., அலுவலகத்திற்கு, திரிணமுல் காங்., தொண்டர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது.மேலும், சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் மீது, திரிணமுல் காங்., கட்சியினர் தாக்குதல் நடத்த முயன்றதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், மாநிலத்தில், தேர்தல் முடிவுகளுக்கு பின், எதிர்க்கட்சித் தொண்டர்களை குறிவைத்து நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து, விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி, மேற்கு வங்க அரசிடம், மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X