சீனாவின் தடுப்பூசிகளுக்கு விரைவில் அனுமதி: உலக சுகாதார அமைப்பு

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஜெனீவா: 'சீனாவின் இரு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு விரைவில் அனுமதியளிக்கப்படும்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் துவங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் கொரோனா

ஜெனீவா: 'சீனாவின் இரு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு விரைவில் அனுமதியளிக்கப்படும்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



latest tamil news


உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் துவங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.


latest tamil news


இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம், சினோவாக் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகளை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து இந்த வாரம் அறிவிக்கப்படும். சில நாடுகள் இந்த தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு எங்கள் முடிவுக்காகக் காத்திருக்கின்றன என்பதை நன்கு அறிவோம். விரைவில் அறிவிக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


பைஸர், மாடர்னா, ஸ்புட்னிக், கோவாக்சின், அஸ்ட்ராஜெனிகா ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சீனாவின் கொரோனா தடுப்பூசிகள் அமீரகம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Doha,கத்தார்
05-மே-202114:51:17 IST Report Abuse
Karthik இந்தியாவிற்கு வேண்டாம்.
Rate this:
Cancel
suresh - nagercoil,இந்தியா
05-மே-202111:58:10 IST Report Abuse
suresh காலில் விழுந்தே விட்டீரா?
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
05-மே-202109:16:01 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இதிலும் வைரசை வைக்க போகிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X