சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : மே 04, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்அணையாத தீகிழக்கு ஐரோப்பாவிற்கும், மேற்கு ஆசியாவுக்கு இடையில் உள்ளது அஜர்பைஜான் நாடு. ரஷ்யா, காஸ்பியன் கடல், ஜார்ஜியா, அர்மேனியா, ஈரான் ஆகிய நாடுகள் இதன் எல்லைகளாக உள்ளன. இங்கு 'யானர் டாக்' என்ற இடம் உலக சிறப்பு மிக்கது. 'நெருப்பின் நிலம்' என அழைக்கப்படும் இங்கு இயற்கையாகவே தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. கடந்த 4000 ஆண்டுகளாக மழை, பனி, காற்று என

அறிவியல் ஆயிரம்
அணையாத தீ

கிழக்கு ஐரோப்பாவிற்கும், மேற்கு ஆசியாவுக்கு இடையில் உள்ளது அஜர்பைஜான் நாடு. ரஷ்யா, காஸ்பியன் கடல், ஜார்ஜியா, அர்மேனியா, ஈரான் ஆகிய நாடுகள் இதன் எல்லைகளாக உள்ளன. இங்கு 'யானர் டாக்' என்ற இடம் உலக சிறப்பு மிக்கது. 'நெருப்பின் நிலம்' என அழைக்கப்படும் இங்கு இயற்கையாகவே தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. கடந்த 4000 ஆண்டுகளாக மழை, பனி, காற்று என எந்த சூழலிலும் அணையாமல் தீ எரிகிறது. அப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள எண்ணெய் வளமே இதற்கு காரணம்.
தகவல் சுரங்கம்
அஞ்சல் குறியீடு

இந்திய தபால் துறையில் 'பின் கோடு' முறை முக்கிய பங்கு வகிக்கிறது. இது அஞ்சல் சேர வேண்டிய முகவரியை சரியாக கண்டுபிடிக்க உதவுகிறது. இது 1972 ஆக.15ல் ஸ்ரீராம் பிகாஜி வேலங்கர் என்பவரால் அறிமுகமானது. இது ஆறு இலக்க எண் கொண்டது. முதல் எண் மண்டலத்தை குறிக்கிறது. இரண்டாவது எண் துணை மண்டலத்தையும், மூன்றாவது எண் மண்டலம் மற்றும் துணை மண்டலத்துக்கு கீழ் வரும் மாவட்டத்தையும், அடுத்த மூன்று எண்கள் அந்த மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தை குறிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X