அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., சட்டசபை தலைவராக ஸ்டாலின் தேர்வு: நாளை கவர்னருடன் சந்திப்பு

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (11+ 28)
Share
Advertisement
சென்னை: தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் துவங்கியது. இதில் தி.மு.க., சட்டசபை தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். வரும் 7-ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, கவர்னர் மாளிகையில், எளிமையாக, முதல்வராக பதவி ஏற்க உள்ளார் ஸ்டாலின்.இந்நிலையில் ஸ்டாலின்
 தி.மு.க., சட்டசபை  தலைவர், ஸ்டாலின் , நாளை கவர்னர்,

சென்னை: தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் துவங்கியது. இதில் தி.மு.க., சட்டசபை தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். வரும் 7-ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, கவர்னர் மாளிகையில், எளிமையாக, முதல்வராக பதவி ஏற்க உள்ளார் ஸ்டாலின்.
இந்நிலையில் ஸ்டாலின் தலைமையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்றனர்.

இதில் தி.மு.க., சட்டசபை தலைவராக, ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை தி.மு.க, பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார். பின்னர் ஸ்டாலினுக்கு மூத்த நிர்வாகிகள் பாராட்டும்,வாழ்த்தும் தெரிவித்தனர்.


இது குறித்து தி.மு.க., வட்டாரங்கள் கூறியது, ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள், நாளை10 மணி அளவில் கவர்னர் மாளிகை சென்று, கவர்னரை சந்தித்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலையும் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளிப்பர்.. கடிதத்தில், பதவியேற்பு விழா நடக்கும் தேதி மற்றும் அமைச்சர்கள் விபரமும் அடங்கியிருக்கும். அக்கடிதத்தை ஏற்று, ஸ்டாலினை பதவியேற்க, கவர்னர் அழைப்பு விடுவார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தனர்.


நினைவிடங்களில் மரியாதை

தொடர்ந்து ஸ்டாலின் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க., பொது செயலாளர் துரை முருகன் முதன்மை செயலார் நேரு, மற்றும் பொருளாளர் ஆகியோர் உடன் சென்றனர்.


Advertisement
வாசகர் கருத்து (11+ 28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-மே-202100:12:48 IST Report Abuse
Pugazh V அதிமுக பாஜக வாசகர்கள் வயத்தெரிச்சல் மற்றும் பொறாமை யில் புலம்புவது படிக்க செம்ம ஜாலியா இருக்கிறது. மேல மேல பதிவிடவும்.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
04-மே-202121:11:32 IST Report Abuse
jagan மண்ணின் மைந்தர் முதல்வர். லெமுரியா கண்டம் தண்ணீரில் மூழ்கியபோது கபாடபுரத்தில் இருந்து ஓடி அகதியாய் வந்தவர்கள் (இலங்கை மற்றும் தென் இந்தியா) தாங்கள் தான் இந்த பூமியின் பூர்வ குடிகள் என்று சீமான் போன்றவர்கள் கத்தலாம் ஆனால் இது தெலுங்கர் கன்னடர் பூமி எனவே மண்ணின் மைந்தராம் தெலுங்கர் மீண்டும் முதல்வர்.
Rate this:
Cancel
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
04-மே-202120:50:31 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ இனி சின்ன சின்ன துக்கடா லட்டர்பேட் கட்சி எல்லாம் வேஸ்ட் லக்கேஜ் என இந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டுவிட்டதால் பெரியகட்சிகள் இனி அவர்கள் மிரட்டல்களுக்கு பயந்து சீட்டுகள் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை, அவர்களும் தன் ஆளுகள் பத்து பேரை வைத்து கொடிபிடித்து ஏதோ தங்களுக்கு தங்கள் சாதி ஓட்டு அத்தனையும் உள்ளதுபோல் இனி பம்மாத்து காட்ட இயலாது, சுடாலினிக்கு கூட வைகோ குருமா எல்லாம் வேஸ்ட் லக்கேஜ்தான், உதயசூரியன் சின்னம் இல்லாமல் போட்டிபோட்டால் இவர்களும் தோற்றிருப்பார்கள், என்ன சுடாலின் இப்போது முதல்வர் ஆகிவிட்டதால் நேரடியாக திட்ட இயலாத 3சதவிகித சமூகம், பெரும்பான்மை மதத்தை கிழித்து தொங்கவிட்டு நிரூபிக்கவேண்டிய மதசார்பின்மை போன்றவற்றை எல்லாம் இவர்களின் உதடுகள் வழியே செய்ய உதவுவார்கள், அம்புட்டுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X