கொரோனா பரிசோதனைக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து:7 போலீசார் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனைக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து:7 போலீசார் காயம்

Added : மே 04, 2021
Share
ஊட்டி: ஊட்டி அருகே கொரோனா பரிசோதனைக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 7 போலீசார் காயம் அடைந்தனர்.மஞ்சூர் அருகே அப்பர் பவனியில், மாவோயிஸ்ட் கண்காணிப்பு பணிக்காக, அதிரடிப்படை முகாம் செயல்பட்டு வருகிறது. முகாமில் ஒரு போலீசாருக்கு கொரோனா, தொற்று உறுதியானது. அந்த போலீசார் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். முகாமில் உள்ள மற்ற 11 போலீசார்
 கொரோனா பரிசோதனைக்கு  சென்ற வேன் கவிழ்ந்து விபத்து:7 போலீசார் காயம்

ஊட்டி: ஊட்டி அருகே கொரோனா பரிசோதனைக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 7 போலீசார் காயம் அடைந்தனர்.

மஞ்சூர் அருகே அப்பர் பவனியில், மாவோயிஸ்ட் கண்காணிப்பு பணிக்காக, அதிரடிப்படை முகாம் செயல்பட்டு வருகிறது. முகாமில் ஒரு போலீசாருக்கு கொரோனா, தொற்று உறுதியானது. அந்த போலீசார் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். முகாமில் உள்ள மற்ற 11 போலீசார் பரிசோதனைக்கு நேற்று மதியம், அப்பர் பவானி முகாமிலிருந்து, மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸ் வேனில் வந்தனர்.

தாய் சோலையில், 33வது கொண்டை ஊசி வளைவில், வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த, 7 போலீசார் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்து சென்றனர். மற்ற நான்கு போலீசார் மஞ்சூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X