சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'இது ஆரம்பம் தான்!'

Added : மே 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
'இது ஆரம்பம் தான்!'திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் எஸ்.சந்திரன் வெற்றி பெற்றார்.தேர்தல் கமிஷன் உத்தரவை மீறி, 100க்கும் மேற்பட்ட அக்கட்சியினர், திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில் பல இடங்களில், வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். யாரும் முக கவசம் அணியவில்லை; சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. அவ்வழியாக சென்றோருக்கு, இனிப்பு
 பக்க வாத்தியம்

'இது ஆரம்பம் தான்!'

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் எஸ்.சந்திரன் வெற்றி பெற்றார்.தேர்தல் கமிஷன் உத்தரவை மீறி, 100க்கும் மேற்பட்ட அக்கட்சியினர், திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில் பல இடங்களில், வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். யாரும் முக கவசம் அணியவில்லை; சமூக இடைவெளியையும்
பின்பற்றவில்லை. அவ்வழியாக சென்றோருக்கு, இனிப்பு வழங்கினர்.இதைப் பார்த்த முதியவர் ஒருவர், 'இதைத் தான், 'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்...' என, வாலி அப்போவே பாடினார்...' என்றார்.அருகிலிருந்த இளைஞர், 'இது ஆரம்பம் தான்... இனி தான் இருக்கு கச்சேரி... வீட்டுக்கு போய் கவனமாக இருங்கள்' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-மே-202105:53:04 IST Report Abuse
D.Ambujavalli இவர்கள் தாங்களும் அடங்க மாட்டார்கள், நோய் பரப்பும் முழு முதல் ‘சேவை’ செய்யும் இத்தகைய தொண்டர்களை அடக்க கட்சி என்ன செய்யப் போகிறது ? ஆட்சியில் அமரும் முன்பே சொரூபத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டார்களே, இன்னும் ஐந்து வருஷத்தை எப்படித் தள்ளப்போகிறோமோ என்று இப்போதே மக்கள் கலக்கம் அடைய ஆரம்பித்துவிட்டார்கள்
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
05-மே-202115:17:59 IST Report Abuse
Dr. Suriyaசுடலை தான் வரவேண்டும் என்று தேர்தலுக்கு முன் கருத்து எழுதின பெங்களூருல் இருக்கும் உங்களுக்கே இப்போ கலக்கமா இருக்க... ஆசைப்பட்டவர்கள் அனுபவிக்கட்டும்... கொக்கி குமாரின் கருத்துக்கள் உண்மையாகி வருகிறது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X