சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

சாமியார் கையில் 'லேப்டாப்!'

Added : மே 04, 2021
Share
Advertisement
சாமியார் கையில் 'லேப்டாப்!''சாமியாராக இருந்தாலும், 'ஹைடெக்' அரசியல்வாதியாகத் தான் இருக்கிறார்' என, உத்தர பிரதேச மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்தை பாராட்டி பேசுகின்றனர், சக அரசியல்வாதிகள். யோகி ஆதித்யநாத், உ.பி.,யில் உள்ள பிரசித்தி பெற்ற, கோரக்பூர் மடத்தின் தலைவராக இருந்து, அரசியலுக்கு வந்தவர். 'சாமியாரை முதல்வராக்கினால்,

 அக்கம் பக்கம்


சாமியார் கையில் 'லேப்டாப்!'



'சாமியாராக இருந்தாலும், 'ஹைடெக்' அரசியல்வாதியாகத் தான் இருக்கிறார்' என, உத்தர பிரதேச மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்தை பாராட்டி பேசுகின்றனர், சக அரசியல்வாதிகள். யோகி ஆதித்யநாத், உ.பி.,யில் உள்ள பிரசித்தி பெற்ற, கோரக்பூர் மடத்தின் தலைவராக இருந்து, அரசியலுக்கு வந்தவர். 'சாமியாரை முதல்வராக்கினால், சரியாக இருக்குமா... அவருக்கு நிர்வாகம் தெரியுமா' என, துவக்கத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அமைதியாக இருந்து, தன் கடமையைச் செய்தார் ஆதித்யநாத்.சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், சில நாட்களுக்கு பின் குணமடைந்தார். அடுத்த சில நாட்களிலேயே, அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், 'லேப்டாப்' வாங்கிக் கொடுக்க, சிறப்பு நிதி ஒதுக்கினார். 'எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தங்கள் பணிகளை, லேப்டாப் வாயிலாகவே மேற்கொள்ள வேண்டும். அவசியம் ஏற்பட்டால் மட்டும், வெளியில் செல்லுங்கள்' என, உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, உ.பி., - எம்.எல்.ஏ.,க்கள், இப்போது லேப்டாப்புடன் பணிகளைச் செய்து
வருகின்றனர். சிலருக்கு, அதை எப்படி பயன்படுத்துவது என, தெரியவில்லை. இதனால், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார். ஆதித்யநாத்தும், தன் பெரும்பாலான அரசு பணிகளை, லேப்டாப் வாயிலாக, வீட்டிலிருந்தபடியே செய்கிறார். 'சாமியார் கையில், லேப்டாப்பை பார்க்கும் போது, ஆச்சரியமாகத் தான் இருக்கிறது' என்கின்றனர்,
உ.பி., மக்கள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X