சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தே.மு.தி.க., தலைவர் நடிகர் விஜயகாந்த்: சட்டசபை தேர்தலில், மக்கள் வழங்கிய தீர்ப்பை மனதார ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் உழைத்த அனைவருக்கும், நன்றிகளை தெரிவிக்கிறேன். தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.'டவுட்' தனபாலு: எந்தவித கொள்கையும் இன்றி, சினிமா கவர்ச்சி, தனிமனிதர்களை முன்னிறுத்தி துவக்கப்பட்ட எந்த

'டவுட்' தனபாலு

தே.மு.தி.க., தலைவர் நடிகர் விஜயகாந்த்: சட்டசபை தேர்தலில், மக்கள் வழங்கிய தீர்ப்பை மனதார ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் உழைத்த அனைவருக்கும், நன்றிகளை தெரிவிக்கிறேன். தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

'டவுட்' தனபாலு: எந்தவித கொள்கையும் இன்றி, சினிமா கவர்ச்சி, தனிமனிதர்களை முன்னிறுத்தி துவக்கப்பட்ட எந்த கட்சியும் நீண்ட காலத்திற்கு வென்றதாக சரித்திரம் இல்லை. அதற்கு உதாரணம், உங்கள் கட்சி என்பதில், தமிழக மக்களுக்கு, 'டவுட்'டே இல்லை. ஏனெனில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, அடுத்த ஐந்தாண்டுகள் கழித்து வரும் தேர்தலுக்குள், தே.மு.தி.க., மறைந்தே விடும் என்பது, தமிழக வாக்காளர்களின் கருத்தாக உள்ளது!

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:
இ.பி.எஸ்.,சுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க, தங்களது ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்ததேஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!

'டவுட்' தனபாலு: 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், இந்த ஊழல் பெருச்சாளிகளை பிடித்து உள்ளே தள்ளுவோம்; அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளும் கம்பி எண்ணுவர்' என, தேர்தல் பிரசாரத்தில் பல முறை முழங்கியுள்ளீர்கள். இப்போது, ஒத்துழைப்போம் வாருங்கள் எனக் கூறுவது, வெற்று பேச்சு தானோ என்ற, 'டவுட்' தமிழக மக்களுக்கு வருகிறது!


தமிழக பா.ஜ., தலைவர் முருகன்:
மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற போது, நான் தெரிவித்த கருத்துகளை மீண்டும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். 2021ல் பா.ஜ., சட்டசபை உறுப்பினர்கள் சட்டசபையை அலங்கரிப்பர் என்று சபதம் ஏற்றிருந்தோம். இன்று அது நிறைவேறி இருக்கிறது. 1996ல் ஒருவரும், 2001ல், நான்கு பேரும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருந்தனர். இப்போது, 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும், நான்கு உறுப்பினர்களை, பா.ஜ., பெற்றிருக்கிறது.

'டவுட்' தனபாலு: 'தமிழகத்தில், பா.ஜ., மலர்ந்தே தீரும்' என, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என்ன முகூர்த்தத்தில் சொன்னாரோ, அது நடந்தே விட்டது. ஒன்றல்ல, நான்கு, முத்தான, எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளனர். அ.தி.மு.க., வினருடன் சேர்ந்து, அவர்கள் சட்டசபையை கலக்குவர் என்பதில் மட்டும், யாருக்கும், 'டவுட்'டே வரவில்லை!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-மே-202105:47:57 IST Report Abuse
D.Ambujavalli இருபது வருஷத்தில், இத்தனை பலம், மத்தியில் ஆளுமை இத்தனை இருந்தும் நாலு இடம் பிடித்து இன்று சட்டசபைக்குள் நுழைவது கூட, ஜெயலலிதா இல்லாத அதிமுக வை பா ஜ அடக்கி வைத்து ஆட்டி வைத்து பெற்ற சீட்களால்தான்
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
06-மே-202115:27:11 IST Report Abuse
Suppanஅதே மாதிரி பலம் வாய்ந்த கட்சியாக இருந்த இந்திரா காங்கிரஸ் ஒரு தேர்தலில் சட்ட சபைக்கு ஒருவரைக் கூட நிறுத்தாமல் பாராளுமன்றத்திற்கே நிறுத்தினார்கள் . அது எதில் சேர்த்தி?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X