சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

எல்லாத்துக்கும் அவர் தான் காரணம்!

Added : மே 04, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
எல்லாத்துக்கும் அவர் தான் காரணம்!ஆர்.சுப்பு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த, தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவு, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொருவிதமான பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய கட்சி, தே.மு.தி.க.,ஜெயலலிதாவால் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற, தே.மு.தி.க., அக்கட்சியை அனுசரித்து நடந்திருக்க


எல்லாத்துக்கும் அவர் தான் காரணம்!ஆர்.சுப்பு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த, தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவு, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொருவிதமான பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய கட்சி, தே.மு.தி.க.,ஜெயலலிதாவால் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற, தே.மு.தி.க., அக்கட்சியை அனுசரித்து நடந்திருக்க வேண்டும். அதை விடுத்து, தே.மு.தி.க.,வால் தான், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தது போல,'பில்டப்' கொடுத்ததால், கூட்டணி உடைந்தது.இதனால், தே.மு.தி.க.,வில் இருந்து ஒவ்வொருவராக கழன்று, அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.அதோடு, 'இனி, தே.மு.தி.க.,வுக்கு இறங்கு முகம் தான்' என, ஜெயலலிதா கூறியது, அடுத்த சில ஆண்டுகளில் பலித்தது.கடந்த, 2016 சட்டசபைத் தேர்தலில், கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க.,வுடன் இணைந்து, 'மக்கள் நலக் கூட்டணி' எனப் பெயர் சூட்டி, முதல்வர் வேட்பாளராக, விஜயகாந்தை முன்மொழிந்தனர். பாவம்... அக்கூட்டணி, ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.அப்போதே, தே.மு.தி.க., உஷாராகி இருக்க வேண்டும். அதை விடுத்து, '2021 தேர்தலில், தே.மு.தி.க., 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்; விஜயகாந்த் தான், 'கிங் மேக்கராக' இருப்பார். கூட்டணியில், 60 'சீட்' தர வேண்டும்' என, அக்கட்சியினர் வாயாலேயே, 'வடை' சுட்டனர்.ஆனால் அந்த, 'வடை' அ.தி.மு.க., - தி.மு.க.,விடம் போணியாகவில்லை.கடைசியில், நேற்று முளைத்த, தினகரனின், அ.ம.மு.க.,வுடன் கூட்டணி
அமைத்தது. போட்டியிட்ட, 60 தொகுதிகளிலும் 'டிபாசிட்'டை பறிகொடுத்தது. இப்போது பேந்த பேந்த முழிக்கின்றனர், தே.மு.தி.க.,வினர்!விஜயகாந்தை சட்டசபைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய விருத்தாசலம் தொகுதி, அவரின் மனைவி பிரேமலதாவிற்கு, டிபாசிட் கூட கிடைக்காத அளவுக்கு, பலத்த அடி கொடுத்துள்ளது.தே.மு.தி.க.,வின் தேர்தல் கூட்டணி,
வியூகம் அனைத்தும், பிரேமலதாவால் தான் மேற்கொள்ளப்பட்டது. அக்கட்சியின் அழிவுக்கு, அவரே முழுக் காரணம்.


ஸ்டாலின் அவர்களே...பெயர் வெளியிடவிரும்பாத அரசு ஊழியை, சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'வெல்கம் மிஸ்டர்' ஸ்டாலின் அவர்களே!உங்கள் தலைமையில் பணிபுரியக் காத்திருக்கிறோம். சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன்:l அரசியல்வாதிகளின் சம்பாத்தியம் என்று சொல்லப்படுகிற, ஊழல் சமாசாரங்களுக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைத்து விடுவீர்கள் தானே!
ஏனெனில், 'கைநீட்டி காசு வாங்கி, மேலிடத்திற்குக் கொடுத்தால் தான், என் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்; இல்லையெனில், தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாறுதல் செய்து விடுவர்' என்ற பயத்திலேயே நாங்கள் ஒவ்வொருவரும் பணிபுரிகிறோம்.'இவ்ளோ கஷ்டப்பட்டு, உள்குத்து, அடிதடி, ரகளையில் ஈடுபட்டு அமைச்சர் பதவிக்கு வந்திருக்கிறோம். அடிமடியில் கை வைக்கச் சொல்லாதீர்கள்' என, உங்கள் சகாக்கள் யாராவது சொன்னால், தயவு செய்து செவி மடுக்காதீர்கள்.
அவர்களுக்கு, அரசிடமிருந்து முறையாக சம்பளம் கொடுக்கிறீர்கள். அது போதுமே!கட்சிக்கு பணம் சேர்க்க, தேவைப்படும் நேரத்தில், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, செய்து கொள்ளலாமே!l'ஸ்டாலின் கட்டினது பா இது... 200 ஆண்டு ஆனாலும், திடகாத்திரமா நின்னு, அவர் பேர் சொல்லுது பாரு...' என, பொதுமக்கள் வியக்கும் வண்ணம், எல்லா கட்டுமானங்களையும் மாற்றுவீர்கள் தானே!l அரசு பணிகள் அனைத்தும், பிரிட்டிஷ் கால, 'ரெட் டேப்பிசம்' முறையில் உள்ளன. அதை மாற்றியமைத்து, குப்பைக்கூளமாகக் கிடக்கும் துறைகளை, சுத்தமான துறைகளாக மாற்றுங்களேன், ப்ளீஸ்!
எங்கள் டேபிளின் முன் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கோப்புகளைப் பார்த்தாலே, அந்தச் சூழலில் பணி செய்தாலே, தலை சுற்றுகிறது.ஆட்கள் குறைப்பு வேண்டாம்; கோப்புகளை இங்கிருந்து அந்த டேபிளுக்கு எடுத்துச் செல்ல, லஞ்சம் கேட்கும் 'பியூன்'களுக்கு பாடம் நடத்துங்களேன்!l எங்களுக்கு தான் இப்படி 'ரெட் டேப்பிசம்' பிரச்னை என்றால், உள்ளாட்சி, சி.எம்.டி.ஏ., போன்றவற்றில் பணிபுரியும் சகாக்களுக்கு எக்கச்சக்க அழுத்தம். நில அபகரிப்பு என்ற மாபெரும் கொள்ளைக்கெல்லாம் அடிபணியச் சொல்லி மிரட்டல் வரும்.
இது போன்ற, 'வளைத்துப் போடுகிற' சமாச்சாரத்திற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பீர்கள் தானே!

* இதை விடுங்க... அப்பாவி மக்கள், வாழ்நாள் முழுதும் உழைத்துச் சேமித்த பணத்தில், குருவிக் கூடு போல ஒரு வீட்டைக் கட்டினால், வாடகைக்கு வருகிறேன் பேர்வழி என நுழைந்து, வாடகை கொடுக்காமல், வீட்டை காலி செய்யாமல்
அபகரிக்கும் சூழல் நிலவுகிறது.'இதெல்லாம் செய்யக் கூடாது. ஜாக்கிரதை...' என, உங்கள் கூட்டணி சகாக்களிடம் சொல்லி வைப்பீர்கள் தானே!*துபாய் போன்ற வெளிநாடுகளில், பொதுமக்களின் எத்தகைய விண்ணப்பத்திற்கும், இரண்டே நாளில் தீர்வு கிடைத்து விடுகிறது. அவ்வளவு ஏன்... பக்கத்தில் உள்ள கேரளாவில் கூட, இ.எஸ்.ஐ., ஆகட்டும்; ரேஷன் கடையாகட்டும்; கள்ளுக் கடையாகட்டும்... எல்லாவற்றிலும் மக்கள் வரிசையில் நின்று, அவரவர் வேலைகளை உடனுக்குடன்
திருப்திகரமாக முடித்து, மகிழ்ச்சியாகச் செல்வதைப் பார்க்க முடிகிறது.அத்தகைய ஒழுங்குமுறையை, தமிழகத்தில் அமல்படுத்துங்களேன்!பொருளாதார ரீதியாக அடுத்த, 2022 ஆண்டு இறுதி வரை, நமக்குகடினமான காலம் என, ரிசர்வ் வங்கி முதல், அனைவரும் எச்சரித்து உள்ளனர். ஆர்ப்பாட்டம் இன்றி, மக்கள் ஆரோக்கியத்தை முன்னேற்றும் வகையில், கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துச் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு எங்களுக்கு!
l ரவுடியிசம், ஜாதியிசம், வெறுப்பிசம், வெறுப்பேற்றும் இசம் எதுவும் இல்லாமல், சீரான, செம்மை யான, மகிழ்ச்சியான ஆட்சிக்கு அடித்தளமிடுங்கள். வாழ்த்துகள்!

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
05-மே-202115:10:09 IST Report Abuse
Dr. Suriya யாருமா நீங்க வேலுமணி அனுப்பிவச்ச ஆளா...
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
05-மே-202108:37:30 IST Report Abuse
Darmavan அறிவிழந்து வாக்காளர் இருக்கும்வரை ஏதும் நடக்காது.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-மே-202106:06:36 IST Report Abuse
D.Ambujavalli அம்மா, உங்களின் மன நிலையில்தான் பெரும்பாலான அரசு ஊழியர்கள் உள்ளனர் தாங்கள் கைகாட்டும் ஆட்களுக்கே, அது எத்தனை விதிமீறலானாலும் ஒத்துழைக்க வேண்டும், இவர்கள் ஆளும் ஐந்து வருஷத்தில் உயிருடன் நரகத்தை அனுபவிக்க நேரிடுமோ என்று பலர் கலக்கத்தில் உள்ளனர் இன்னும் நுழையும் முன்பே அம்மா உணவகத்தில் ஒரு சாம்பிள் காட்டிவிட்டநர்
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
05-மே-202115:11:48 IST Report Abuse
Dr. Suriyaஎன்னம்மா..வள்ளி தேர்தலுக்கு அப்புறம் அப்படியே U டர்ன் அடிச்சுடீங்க......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X