உள்குத்து வேலை; மூணு தொகுதி அம்போ!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

உள்குத்து வேலை; மூணு தொகுதி அம்போ!

Added : மே 04, 2021 | கருத்துகள் (1)
Share
உள்குத்து வேலை; மூணு தொகுதி அம்போ!''அமைச்சர் பதவி கனவோட வலம் வந்தவரு, மனசொடிஞ்சு போயிட்டாருங்க...'' என, குப்பண்ணா வீட்டு தாழ்வாரத்தில், அரட்டையை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''தி.மு.க., தகவலா வே...'' என்றார் அண்ணாச்சி.''ஆமாம்... கிருஷ்ணகிரி தொகுதியில போட்டியிட்ட, தி.மு.க., வேட்பாளர் செங்குட்டுவன், ஓட்டு எண்ணி முடிக்கிற வரைக்கும் இருந்தார்... கடைசியில, 792 ஓட்டு

டீ கடை பெஞ்ச்


உள்குத்து வேலை; மூணு தொகுதி அம்போ!''அமைச்சர் பதவி கனவோட வலம் வந்தவரு, மனசொடிஞ்சு போயிட்டாருங்க...'' என, குப்பண்ணா வீட்டு தாழ்வாரத்தில், அரட்டையை ஆரம்பித்தார்,
அந்தோணிசாமி.

''தி.மு.க., தகவலா வே...'' என்றார் அண்ணாச்சி.

''ஆமாம்... கிருஷ்ணகிரி தொகுதியில போட்டியிட்ட, தி.மு.க., வேட்பாளர் செங்குட்டுவன், ஓட்டு எண்ணி முடிக்கிற வரைக்கும் இருந்தார்... கடைசியில, 792
ஓட்டு வித்தியாசத்துல தோத்துட்டாருங்க...

''ஏற்கனவே இவர், வேப்பனப்பள்ளி தொகுதியில ஒரு முறையும், கிருஷ்ணகிரி தொகுதியில, இரண்டு முறையும் எம்.எல்.ஏ.,வா இருந்தார்... மாவட்ட செயலராகவும் இருக்கிறதால, இந்த முறை ஜெயிச்சா, அமைச்சராகுற வாய்ப்பு இருந்ததுங்க...

''எல்லாத்துக்கும் மேலா, ஒரு மாசமா, சமூக வலைதளங்கள்ல வலம் வந்துட்டு இருந்த தி.மு.க., அமைச்சரவை பட்டியல்ல, 'மீன்வளத் துறை அமைச்சர்
செங்குட்டுவன்'னு இருந்தது...

''கடைசியில கதை கந்தலாகிட்டதால, செங்குட்டுவன் பயங்கர சோகத்துல இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.உடனே, ''ரெண்டு வேட்பாளர்களும் கண்ணீர் விட்டு
அழுதுட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''எந்த தொகுதி நிலவரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டசபை தொகுதியில, பா.ம.க., சார்புல சதாசிவம், தி.மு.க., சார்புல சீனிவாச பெருமாள் போட்டியிட்டா... ரெண்டு பேருமே தொழிலதிபர்கள் தான் ஓய்...

''எண்ணிக்கை நடந்தப்ப, மதியம் வரை, தி.மு.க., வேட்பாளர் முன்னிலையில இருந்தார்... இதனால, தோல்வி பயத்துல சதாசிவம், கட்சியினர் முன்னிலையில கண்ணீர் வடிச்சார் ஓய்...

''கடைசியா, சதாசிவம், 656 ஓட்டுகள் வித்தியாசத்துல, ஜெயிச்சிட்டாரோல்லியோ... இதனால, விரக்தியான சீனிவாச பெருமாள், கண்ணீர் விட்டு
அழுதார் ஓய்...

''எல்லாத்துக்கும் மேல, சீனிவாச பெருமாளை, மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் செல்வகணபதி, தன் கட்டுப்பாட்டுல வச்சிருந்தார்... அவரது பிரசார திட்டம், பட்டுவாடா விவகாரங்கள் எல்லாத்தையும் அவர் தான் பார்த்துண்டார்... எல்லா வியூகத்தையும் மீறி, தோத்துட்டதால, அவருமே நொந்துபோய் தான் இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''உள்குத்து வேலையால, மூணு தொகுதியும் கைநழுவிடுச்சு பா...'' என, கடைசி தகவலை கையில் எடுத்தார், அன்வர்பாய்.

''எந்த கட்சி விவகாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தி.மு.க., கூட்டணியில, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, வாணியம்பாடி, சிதம்பரம், கடையநல்லுார்னு மூணு தொகுதிகளை ஒதுக்குனாங்கல்ல... இதுல, கடையநல்லுார், முஸ்லிம் லீக் கட்சி வசம் தான் இருந்துச்சு பா...

''அ.தி.மு.க., அரசு அறிவித்த வன்னியர் உள்ஒதுக்கீட்டால, சிதம்பரம், வாணியம்பாடி தொகுதிகள்ல இருந்த தி.மு.க.,வினரது வன்னியர் சமுதாய ஓட்டுகளே, அ.தி.மு.க., அணிக்கு போயிடுச்சாம் பா...

''கடையநல்லுார் தொகுதியில, அ.ம.மு.க., வேட்பாளருக்கு ஆதரவா, தி.மு.க.,வுல இருந்த முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் விழுந்துடுச்சு... இதனால தான், முஸ்லிம் லீக், அங்கயும் தோத்துடுச்சு பா...'' என்றார், அன்வர்பாய்.

''கூட்டணி தர்மத்தை, தி.மு.க.,வினரே மதிக்கலைன்னு சொல்லுங்க...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X