வெளுத்துவாங்கியது கோடை மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளுத்துவாங்கியது கோடை மழை

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (4)
Share
மதுரை: மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியது. தமிழகத்தில் இன்று முதல் கத்தரி வெயில் துவங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் கேரள மாநில பகுதியில் வளி மண்டல சுழற்சி காரணமாக மழைபெய்ய வாய்ப்புஉள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை ஒட்டி

மதுரை: மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியது.



latest tamil news



தமிழகத்தில் இன்று முதல் கத்தரி வெயில் துவங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் கேரள மாநில பகுதியில் வளி மண்டல சுழற்சி காரணமாக மழைபெய்ய வாய்ப்புஉள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி தென்காசி, விருதுநகர், தேனி, திருப்பூர், கோவை, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது. மேலும் வட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்திருந்தது.


latest tamil news




latest tamil news



இதனிடையே மதுரை திண்டுக்கல் உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X