சில வரி செய்திகள்... :இந்தியா

Added : மே 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'புதுடில்லி: டில்லி துணை நிலை கவர்னருக்கு, கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தத்தை, மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. இதை ரத்து செய்யக்கோரிய பொதுநல மனு, டில்லி உயர் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக, மத்திய சட்டம் மற்றும் உள்துறை அமைச்சகம் பதில் அளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர். குவைத்
 சில வரி செய்திகள்... :இந்தியா

மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'

புதுடில்லி: டில்லி துணை நிலை கவர்னருக்கு, கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தத்தை, மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. இதை ரத்து செய்யக்கோரிய பொதுநல மனு, டில்லி உயர் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக, மத்திய சட்டம் மற்றும் உள்துறை அமைச்சகம் பதில் அளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குவைத் புறப்பட்ட கப்பல்

கொச்சி: கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தால் ஏற்பட்டுள்ள, ஆக்சிஜன் பற்றாக் குறைக்கு தீர்வு காண, குவைத்தில் இருந்து, திரவ ஆக்சிஜன் நிரப்பிய, 'கிரையோஜெனிக் கன்டெய்னர்'களை ஏற்றி வருவதற்காக, ஐ.என்.எஸ்., ஷார்துல் என்ற கடற்படை கப்பல், கேரளாவின் கொச்சியில் இருந்து, நேற்று புறப்பட்டு சென்றது.

ஜக்மோகன் காலமானார்

புதுடில்லி: வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில், அமைச்சராக இருந்தவர் ஜக்மோகன், 93. ஜம்மு - காஷ்மீர் கவர்னராகவும் இருந்துள்ள அவர், டில்லியில் வசித்து வந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் ஜக்மோகன் காலமானார்; அவரது மறைவிற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மசூதிக்குள் புகுந்த மர்ம நபர்கள்

மதுரா: உத்தர பிரதேசத்தின் மதுராவில், கோவர்தன் நகரில் உள்ள மசூதிக்குள், நேற்று முன்தினம் அத்துமீறி புகுந்த சிலர், அங்கிருந்த இமாமுடன் தகராறு செய்தனர். பின், மசூதியின் ஒலிபெருக்கியுடன் பொருத்தப்பட்டிருந்த, 'ஒயர்'களை, துண்டித்து எடுத்துச் சென்றனர். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
06-மே-202101:21:10 IST Report Abuse
தல புராணம் இரண்டு வரி செய்தி - மோடி இந்த பெரும் தொற்றை பெருமுதலாளிகக்கான ஒரு நல்ல வியாபார வாய்ப்பு என்று தான் கணக்கு பண்றார்.. அவருடைய திட்டமிடாத திட்டங்கள் (?), செய்யாத செயல்பாடு, மக்களை வதைக்கும் குணம் எல்லாவற்றையும் பார்த்தால் சந்தேகமே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X