பொது செய்தி

இந்தியா

கடும் குளறுபடிகளால் தேங்கும் வெளிநாட்டு உதவிப் பொருட்கள்

Added : மே 04, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட பொருட்கள், சுங்கத் துறை ஒப்புதல் மற்றும் எங்கு அனுப்புவது போன்ற குளறுபடிகளால் தேங்கிஉள்ளன.நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் இருந்து உதவிப் பொருட்கள்
 கடும் குளறுபடிகளால் தேங்கும் வெளிநாட்டு உதவிப் பொருட்கள்

புதுடில்லி:கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட பொருட்கள், சுங்கத் துறை ஒப்புதல் மற்றும் எங்கு அனுப்புவது போன்ற குளறுபடிகளால் தேங்கிஉள்ளன.

நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் இருந்து உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.போக்குவரத்து வசதிஇதுவரை, 20 விமானங்களில் உதவிப் பொருட்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆக்சிஜன் செறிவூட்டிகள்,'ரெம்டெசிவிர்'மருந்துகள் என,பல பொருட்கள் வந்துள்ளன. ஆனால், சுங்கத் துறை அனுமதி வழங்குவதில் உள்ள கோளாறுகளால், பெரும்பாலான பொருட்களை வெளியே அனுப்ப முடியவில்லை.அதைத் தவிர, அந்தப் பொருட்களை எங்கு, யாருக்கு அனுப்ப வேண்டும் என்பது தொடர்பான தெளிவான திட்டமிடல் இல்லாதது, போக்குவரத்து வசதி செய்யாதது ஆகிய நிர்வாக குளறுபடிகளும் இணைந்து, உதவிப் பொருட்கள் தேங்குவதற்கு காரணமாகி உள்ளன.

இது குறித்து சுகாதார துறை உயரதிகாரிகள் கூறியதாவது:
சில பிரச்னைகள் உள்ளது உண்மை தான். சுங்க துறையால் தாமதம் ஏற்படுவதை தடுக்க, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அரசுகளிடம் இருந்து அரசுக்கு; வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து நம் அரசுக்கு; வெளி நாட்டு நிறுவனங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களில் இருந்து நம் நாட்டில் உள்ள நிறுவனங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு என, பல விதங்களில், உதவிப் பொருட்கள் வந்துள்ளன.சிக்கல்அந்தந்த நிலைக்கு ஏற்ப அவை கையாளப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து நம் அரசுக்கு வந்துள்ள பொருட்களில், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை யாருக்கு, எப்படி அனுப்ப வேண்டும் என்பதிலும் சிக்கல் உள்ளது. அடுத்த சில நாட்களில் இந்தக் குழப்பங்களுக்கு தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தட்டுப்பாடு இல்லை

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தடுப்பூசிகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை. கையில் தற்போது, 75 லட்சம், 'டோஸ்' தடுப்பூசிகள் உள்ளன. அவற்றில், 48 லட்சம் தடுப்பூசிகள், மூன்று நாட்களுக்குள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவரை, நாடு முழுதும், 16 கோடி, 'டோஸ்' மருந்து இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
06-மே-202110:15:51 IST Report Abuse
Apposthalan samlin இந்த பொருட்களையும் வீணாகி குபையில் கொட்டுவார்கள் என்று தெரிகிறது. யுனிசெப் விடம் ஒப்படைத்து விடலாம் .
Rate this:
Cancel
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
06-மே-202107:07:32 IST Report Abuse
Venkataramanan Thiru பிரதம மாநதிriயும் , உள்துறை மினிஸ்டரும் எங்கே போனார்கள்?
Rate this:
Cancel
Chola - bangalore,இந்தியா
05-மே-202112:41:22 IST Report Abuse
Chola வரிய மட்டும் ஒடனே வாங்குங்க.. வேலைய அப்பறம் செஞ்சுக்கலாம்.. எல்லாம் தலையெழுத்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X