வெற்றிகரமான தோல்வி பட்டியலில் மம்தா

Updated : மே 05, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
கோல்கட்டா: தேர்தலில், கட்சி வெற்றி பெற்றும், அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தோல்வி அடைந்தவர்களின் பட்டியலில், மம்தா பானர்ஜியும் இணைந்துள்ளார்.மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, முன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த வெற்றியை, திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரால், முழுமையாக கொண்டாட
Mamata Banerjee, Mamata, West Bengal CM, மம்தா

கோல்கட்டா: தேர்தலில், கட்சி வெற்றி பெற்றும், அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தோல்வி அடைந்தவர்களின் பட்டியலில், மம்தா பானர்ஜியும் இணைந்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, முன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த வெற்றியை, திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரால், முழுமையாக கொண்டாட முடியவில்லை.ஏனெனில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட, முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தோல்வியடைந்துள்ளார்.


சட்டசபை தேர்தல்


முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் தோல்வியை சிலர் சந்தித்துள்ளனர். ஆனால், முதல்வராக இருந்து, கட்சி வெற்றி பெற்றும், தோல்வியடைந்தவர், மம்தா மட்டும் தான்.மஹாராஷ்டிரா மாநிலம், 1952ல், மும்பை மாநிலமாக இருந்தது. அப்போது நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது. தேர்தலில், கட்சியின் மூத்த தலைவராக இருந்த, முதல்வர் வேட்பாளர் மொரார்ஜி தேசாய் தோல்வி யடைந்தார். ஆனாலும், அப்போதைய பிரதமர் நேருவின் அறிவுரைப்படி, மும்பை சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக மொரார்ஜி தேர்வு செய்யப்பட்டு, முதல்வராக பதவியேற்றார்.


கூட்டணி ஆட்சி


உத்தர பிரதேசத்தில், 1970ல், திரிபுவன் நாராயண் சிங் தலைமையிலான, நிறுவன காங்கிரஸ், சுதந்திரா, பராதிய ஜனசங்கம், பாரதிய கிராந்தி தள் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. முதல்வராக பதவியேற்ற போது, திரிபுவன் நாராயண் சிங், எம்.எல்.ஏ.,வாக இல்லை. அதன் பின், ஒரு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட திரிபுவன் நாராயண் சிங், தோல்வியடைந்தார்.

இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து விலகினார். ஒடிசாவில், 1971ல் நடந்த சட்டசபை தேர்தலில், பிஜு பட்நாயக் தலைமையிலான கூட்டணி, ஆட்சியை பிடித்தது. நான்கு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட பிஜு பட்நாயக், நான்கிலும் தோல்வியடைந்தார். இதனால், பிஸ்வனாத் தாஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.

ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த, 2017ல் நடந்த தேர்தலின் போது, பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக, முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமல் அறிவிக்கப்பட்டிருந்தார். தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. துமல் தோல்விஅடைந்தார். இதைஅடுத்து, ஜெய்ராம் தாக்குர், முதல்வரானார். கட்சி வெற்றி பெற்றும், தோல்வியடைந்தோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள மம்தா, மேற்கு வங்க முதல்வராக மீண்டும் பதவியேற்ற பின், ஆறு மாதத்துக்குள் ஒரு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
05-மே-202118:57:37 IST Report Abuse
Endrum Indian இவனுங்களுக்கு ஜன சேவை தான் தனது கடமை என்று யார் உணரவைக்க முடியும்????
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
05-மே-202116:07:31 IST Report Abuse
sahayadhas குத்துது குடையுதுனு சொல்லி no Use
Rate this:
Cancel
Jawahar Jameela - Madurai,இந்தியா
05-மே-202111:35:39 IST Report Abuse
Jawahar Jameela நிம்மி எப்படி அமைச்சர் ஆனாங்க? அவங்க எந்த தொகுதி MP?
Rate this:
Jayvee - chennai,இந்தியா
06-மே-202108:52:24 IST Report Abuse
Jayveeகண்ணு ஜமீலா அவங்க ராஜ்ஜியச சபா எம்பீ .. இது கூட தெரியாம .. முதல்ல பாக்கிஸ்தான் கொடிய போட்டுக்க.. அதுதான் உனக்கு எதிர்காலம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X