பொது செய்தி

இந்தியா

ஜே.இ.இ., தேர்வு ஒத்திவைப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
புதுடில்லி:இம் மாதம் நடக்கவிருந்த, ஜே.இ.இ., மெயின் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி., போன்ற, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு நடத்தப்படும், ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில், வழக்கமாக நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெற்றிகரமாக நடத்தப்

புதுடில்லி:இம் மாதம் நடக்கவிருந்த, ஜே.இ.இ., மெயின் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி., போன்ற, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு நடத்தப்படும், ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில், வழக்கமாக நடத்தப்படும்.

இந்த ஆண்டுக்கான தேர்வு, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெற்றிகரமாக நடத்தப் பட்டது. கொரோனா பரவல் காரணமாக, இம்மாதம் நடக்கவிருந்த, ஜே.இ.இ., மெயின் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் குறையாததால், இம்மாதம், 24 - 28ம் தேதி வரை நடக்கவிருந்த, ஜே. இ.இ., மெயின் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக, மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 'ஏப்ரல், மற்றும் மே மாதத்துக்கான, ஜே.இ.இ., மெயின் தேர்வு, தொற்று பரவல் குறைந்த பின், அடுத்தடுத்து நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X