வைரஸ் வேகமாக பரவுவது ஏன்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

Updated : மே 08, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
மும்பை: 'இரண்டாவது அலையில் தென்படும் உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸ், முந்தையதைவிட, இரண்டரை மடங்கு ஆபத்தானதாக உள்ளது; இதுவே, பரவல் அதிக வேகமாக நடப்பதற்கு காரணம்' என, ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.ஆபத்தானதுமஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த, டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த, இந்திய அறிவியல் மையம் ஆகியவை
Corona Virus, Covid 19, India Fights Corona, கொரோனா, வைரஸ், ஆராய்ச்சியாளர்கள்

மும்பை: 'இரண்டாவது அலையில் தென்படும் உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸ், முந்தையதைவிட, இரண்டரை மடங்கு ஆபத்தானதாக உள்ளது; இதுவே, பரவல் அதிக வேகமாக நடப்பதற்கு காரணம்' என, ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.


ஆபத்தானது


மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த, டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த, இந்திய அறிவியல் மையம் ஆகியவை இணைந்து, கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆய்வு மேற்கொண்டன. கணித அடிப்படையில் நடந்த இந்த ஆய்வு குறித்து, அவை கூறியுள்ளதாவது:

தற்போது பரவி வரும் வைரஸ், முந்தையதைவிட, இரண்டரை மடங்கு ஆபத்தானது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அவர் வாயிலாக, மேலும், மூன்று பேருக்கு பரவும் ஆபத்து உள்ளது.அதனால் தான், இரண்டாவது அலையில், தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தடுப்பூசி வழங்குவது தொடர்ந்தால், ஜூனில் இருந்து பலி எண்ணிக்கை வெகுவாக குறையும்.மே மாதத்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் படிப்படியாக குறைந்து, ஜூலையில் பள்ளிகளை திறக்கும் சூழ்நிலை ஏற்படும்.


உள்ளூர் ரயில்


பிப்., முதல் வாரத்தில், இரண்டாவது அலை துவங்கியது. ஆனால், உள்ளூர் ரயில்கள் முழுமையாக இயக்க உத்தரவிட்டதே, பாதிப்பு அதிகரிக்க காரணமாகி விட்டது.இவ்வாறு அவை கூறியுள்ளன.


தொடர்பில் 45 சதவீதம் பேர்


கர்நாடகாவிலும் வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. பெங்களூரு நகரில், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி பார்க்கையில், 45 சதவீதம் பேர், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டோருடன், பெங்களூரில் மட்டும், 48.5 லட்சம் பேர், தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளதாக, மாநகராட்சி கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - chennai,இந்தியா
05-மே-202120:37:20 IST Report Abuse
sankar பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் தமிழ் நாட்டு மக்கள் எதனை பட்டாலும் மீண்டும் அதே இடத்தில பொய் விழுவார்கள்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
05-மே-202119:25:29 IST Report Abuse
g.s,rajan எல்லாத்துக்கும் காரணமான அந்த சீனாக்காரன் மேல் குண்டைப் போடுங்க எல்லாம் சரியாயிடும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
05-மே-202110:38:43 IST Report Abuse
S.P. Barucha அதிமதுரம், ஆடாதொடை , சீந்தில் கொடி, அமுக்கரா எல்லாம் சூரணம் ஒவ்வொன்றும் ¼ spoon, நீரில் கொதிக்க வைத்து குடிக்க கொரோன குணமாக்கும். இந்தியாவில் கொரோனா பருவகால வியாதியாக மாறிவருகிறது. மக்கள் மட்டும் சுகாதரமாக இருந்தால் மட்டும் போதாது, பொது இடமும் சுகாதாரமாக இருக்க வேண்டும். இந்தியா முழுவதும், எல்லா மாநிலங்களிலும் புழுக்கள் நிறைந்த திறந்த சாக்கடைகள், அள்ளப்படாத சாக்கடை கழிவுகள்,சாக்கடை மற்றும் பொது கழிப்பிடங்களில் இயங்கும் உணவகங்கள்,, தகுதி இல்லாத ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் , ஆளுமை இல்லாத பொறுப்பில் உள்ள இந்திய அரசியல் வாதிகள் மற்ற நாடுகளை நம்பித்தான் இந்தியா எப்படி உள்ளது என சொல்லும் நிலையில் இந்தியா உள்ளது.மழை காலங்களிலும், பனி, குளிர் காலங்களிலும் தொற்று அதிகம் பரவும். ஆகவே வளர்ந்த நாடுகளின் அறிவாற்றல் இந்திய விஞ்ஞானிகளுக்கு வேண்டும் ஆகவே ஒவ்வ்ரு துறையிலும் நீட் போன்ற தேர்வுகள் அவசியம் வேண்டும், படித்தவர்களால் மட்டுமே தற்போது வீரியம் எடுக்கும் மருத்துவர்களால் கையாளமுடியும், கல்வியில், ஆராய்ச்சி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இருக்க கூடாது இதற்காக மக்கள் போராடவும் கூடாது.
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
05-மே-202115:28:44 IST Report Abuse
Dr. Suriyaஇங்கனே சமசீர் கல்வி என்ற குப்பையைத்தான் படிக்கணுமுன்னும் நீட்டு வேணாமுன்னும் சொல்றானுவோ.......
Rate this:
Nalanvirumbi - New York,யூ.எஸ்.ஏ
05-மே-202118:13:16 IST Report Abuse
Nalanvirumbiஇடஒதுக்கீடும் இல்ல, சமசீர் கல்வியும் இல்ல. ஒரு துணை பேராசிரியர் பதவி இருபது லட்சம், இணை பேராசிரியர் பதவி முப்பது லட்சம் மேலும் பேராசிரியர் பதவி ஐம்பது லட்சம் . இப்படி லஞ்சம் கொடுத்து வந்தால் எப்படி ஆராய்ச்சி செய்வார்கள்? வருவதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். குறுக்கு வழியில் சிந்திக்கும் மனிதன்.. மனிதனைவிட புத்திசாலித்தனமாக பரிணமிக்கும் கொரோன வைரஸ்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X