அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்களுக்கான அரசு பங்களாக்கள் 10 நாட்களில் காலி செய்ய உத்தரவு

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:சென்னையில் உள்ள அரசு பங்களாக்களை, 10 நாட்களுக்குள் காலி செய்யும்படி, அமைச்சர்களுக்கு பொதுப்பணித் துறை உத்தரவிட்டுள்ளது.சென்னை கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு, 76 பங்களாக்களை அரசு கட்டியுள்ளது. ஒவ்வொரு பங்களாவும், 10 கிரவுண்டுக்கு மேலான நிலப்பரப்பில், 5,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.சபாநாயகருக்கான பங்களா மட்டும், 1 ஏக்கர் நிலப்பரப்பில்

சென்னை:சென்னையில் உள்ள அரசு பங்களாக்களை, 10 நாட்களுக்குள் காலி செய்யும்படி, அமைச்சர்களுக்கு பொதுப்பணித் துறை உத்தரவிட்டுள்ளது.சென்னை கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு, 76 பங்களாக்களை அரசு கட்டியுள்ளது. ஒவ்வொரு பங்களாவும், 10 கிரவுண்டுக்கு மேலான நிலப்பரப்பில், 5,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.

சபாநாயகருக்கான பங்களா மட்டும், 1 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.பங்களாக்களில், அமைச்சர்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர், தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பங்களாக்களை பொதுப்பணி துறையினர் பராமரித்து வருகின்றனர். சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வரும், 7ம் தேதி, கவர்னர் மாளிகையில் நடக்கும் எளிமையான விழாவில், முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். அதைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு நடைபெற உள்ளது.

எனவே, அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள், 10 நாட்களில் பங்களாக்களை காலி செய்ய பொதுப்பணித் துறை வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது. தங்களின் சொந்த மாவட்டங்களில் முகாமிட்டுள்ள அமைச்சர்களுக்கு, மொபைல்போன் வாயிலாக, இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில், சென்னைக்கு வந்து அறைகளை காலி செய்வதாக, அவர்கள் உறுதியளித்து உள்ளனர். எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளவர், அரசு பங்களாவை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

எனவே, பழனிசாமி., - பன்னீர்செல்வம் ., ஆகியோரில் ஒருவர், எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கலாம்.எனவே, இவர்கள் மட்டும் பங்களாக்களை, ஒரு மாதத்தில் காலி செய்ய அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. பங்களாக்கள் காலியானவுடன், அவற்றில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு, புதிய அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X