அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊடக துறையினரும் முன்கள பணியாளர்கள் தான்

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை:'ஊடக துறையில் பணியாற்றுவோர், முன்கள பணியாளர்களாக கருதப்படுவர்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு, நான்காவது துாணாய் விளங்குவது ஊடக துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை, ஊடக துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக, அயராது
ஊடக துறையினர், முன்கள பணியாளர்கள் ,

சென்னை:'ஊடக துறையில் பணியாற்றுவோர், முன்கள பணியாளர்களாக கருதப்படுவர்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு, நான்காவது துாணாய் விளங்குவது ஊடக துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை, ஊடக துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக, அயராது உழைக்கின்றனர்.கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரை பணயம் வைத்து உழைக்கும் ஊடக துறையினர், முன்கள பணியாளர்களாக, தமிழகத்தில் கருதப்படுவர்.

செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வரும் அனைவருமே, இந்த வரிசையில் அடங்குவர். முன்கள பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.ஸ்டாலினின் இந்த அறிவிப்பை, சென்னை பத்திரிகையாளர் மன்றம் உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகளும் வரவேற்றுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
05-மே-202116:15:08 IST Report Abuse
Anand //ஊடக துறையினரும் முன்கள பணியாளர்கள் தான்// யாருக்கு?
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
05-மே-202115:41:00 IST Report Abuse
konanki தேர்தலுக்கு முன்.. சன் டிவி: பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசு. தேர்தலுக்கு பின்.. சன் டிவி: பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் எண்ணெய் நிறுவனங்கள்.- முன்களப்பணியாளர்கள் 😂 திமுக ராஜ்ய சபா எம் பி சொன்னதை நீருபித்த கொத்தடிமைகள்.
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
05-மே-202110:26:28 IST Report Abuse
kosu moolai முன்கள பணியாளர்கள் கொரானாவில் இறந்தால் அரசு 1 கோடி ரூபாய் உதவி தரவேண்டுமென தேர்தலுக்கு முன்பிருந்தே மிக உறுதியாக அரசுக்கு அறிவுரை வழங்கிய ஸ்டாலின் அவர்கள் நேற்று கொரனாவால் உயிரிழந்த தலைமை காவலர் கமலகண்ணணுக்கு தனது கனவு கொள்கையை நனவாக்க மறைந்த காவலர் குடும்பத்திற்க்கு 1 கோடியும், குடும்பத்தில் ஓருவருக்கு அரசு வேலையும் கொடுத்து இந்த நல்லபணியை தொடங்கி வைப்பது மட்டுமில்லாது முந்தைய அரசு இந்த தொகைக்கு குறைவாக கொடுத்திருந்தால் மீதி தொகையையும், அரசு வேலை ஆணையையும் பாதிக்கப்பட்டிருந்த குடும்பங்களுக்கும் கொடுக்க வேண்டும். ஏனெனில் திமுக என்றுமே செய்வதைதான் சொல்வார்கள் சொல்வதைத்தான் செய்வார்கள். இந்த நற்பணிகக்கு பத்திரிக்கையாளர்கள் இந்த மாதிரியான விஷயங்களை உடனடியாக முதல்வர் கவனத்திற்க்கு கொண்டு சென்று உதவுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X