அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிர்க்கட்சி தலைவர் யார்? நாளை மறுதினம் முடிவு!

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு, நாளை மறுதினம் முடிவு தெரியும்.சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை பெற்ற தி.மு.க., ஆட்சியை பிடித்தது. அக்கட்சி தலைவர் ஸ்டாலின், வரும், 7ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில், அ.தி.மு.க., 66 தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,

சென்னை:தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு, நாளை மறுதினம் முடிவு தெரியும்.சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை பெற்ற தி.மு.க., ஆட்சியை பிடித்தது. அக்கட்சி தலைவர் ஸ்டாலின், வரும், 7ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில், அ.தி.மு.க., 66 தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சியாகி உள்ளது.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோரில், யார் எதிர்க்கட்சி தலைவராவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில், இவர்கள் தவிர்த்து வேறு ஒருவர், எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்றும், தகவல் பரவியது. இதை கட்சி நிர்வாகிகள் மறுத்தனர்.

அவர்கள் கூறியதாவது:எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி., - துணைத் தலைவராக பன்னீர்செல்வம் ., தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அப்பதவிகளை, அவர்கள் விட்டுக் கொடுத்தால், வேறு நபர் வரலாம்; ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவு.

பழனிசாமி., முதல்வர் வேட்பாளர் என்பதால், சட்டசபை அ.தி.மு.க., தலைவராக தேர்வு செய்யப்படுவார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.அ.தி.மு.க., சட்டசபை தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகியோரை தேர்வு செய்வதற்காக, நாளை மறுதினம் மாலை, 4:30 மணிக்கு, அ.தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தின் முடிவில், எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தெரிந்துவிடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X