பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தல் முடிவுகள் கவர்னரிடம் ஒப்படைப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, கவர்னரிடம் ஒப்படைத்தார்.தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல், 6ல் நடந்தது. பதிவான ஓட்டுகள், இம்மாதம், 2ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு, எம்.எல்.ஏ.,வாக தேர்வானதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.தேர்தல் முடிவுகளை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம், தமிழக தலைமை
 சட்டசபை தேர்தல் முடிவுகள் கவர்னரிடம் ஒப்படைப்பு

சென்னை:தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, கவர்னரிடம் ஒப்படைத்தார்.

தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல், 6ல் நடந்தது. பதிவான ஓட்டுகள், இம்மாதம், 2ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு, எம்.எல்.ஏ.,வாக தேர்வானதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.தேர்தல் முடிவுகளை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வழங்கினார்.

அப்போது, கவர்னரின் செயலர் ஆனந்தராவ் பாட்டீல், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன், இணை தலைமை தேர்தல் அதிகாரி ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர். தலைமை தேர்தல் அதிகாரி வழங்கிய, தேர்தல் முடிவுகளை, கவர்னர் சட்டசபை செயலருக்கு அனுப்பி வைப்பார். அந்த முடிவுகள் அடிப்படையில், தேர்தலில் பெரும்பான்மை பெற்ற தி.மு.க., ஆட்சி அமைக்க உரிமை கோரியதும், அவர்களை ஆட்சி அமைக்க, கவர்னர் அழைப்பார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X