பொது செய்தி

தமிழ்நாடு

பிரிட்டன், ஜெர்மனியில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகை

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:பிரிட்டன், ஜெர்மனி நாடுகளில் இருந்து, 900 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள், இந்திய விமானப்படை விமானத்தில், சென்னை கொண்டு வரப்பட்டன.நாடு முழுதும், கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. பல மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய - மாநில அரசுகள், ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்க, முயற்சிகள் எடுத்து வருகின்றன.அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி,
 பிரிட்டன், ஜெர்மனியில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகை

சென்னை:பிரிட்டன், ஜெர்மனி நாடுகளில் இருந்து, 900 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள், இந்திய விமானப்படை விமானத்தில், சென்னை கொண்டு வரப்பட்டன.

நாடு முழுதும், கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. பல மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய - மாநில அரசுகள், ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்க, முயற்சிகள் எடுத்து வருகின்றன.அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, யு.ஏ.இ., உள்ளிட்ட பல நாடுகள், இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, பிரிட்டன் நாட்டில் இருந்து இந்திய விமான படையின், 'சி 17 குளோப் மாஸ்டர்' விமானத்தில், 900 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள்; ஜெர்மனி நாட்டில் இருந்து, நான்கு கிரயோஜெனிக் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வந்தன.சென்னைக்கு வந்த, ஆக்சிஜன் சிலிண்டர்களை, சுங்கத்துறையினர், 15 நிமிடங்களில் சோதனை செய்து, இந்திய செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.

ஒவ்வொரு ஆக்சிஜன் சிலிண்டரும், 46.6 லிட்டர் ஆக்சிஜனை சேமிக்கும் திறன் உடையது. 'இவை, இந்திய செஞ்சிலுவை சங்கம் வாயிலாக, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப் படும்' என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


2.75 லட்சம் 'டோஸ்' தடுப்பூசி மருந்தும் வந்தது

கொரோனா தொற்று தடுப்புக்கான, 2.75 லட்சம், 'கோவிஷீல்டு, கோவாக்சின்' தடுப்பூசி மருந்துகள், விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், தடுப்பூசி மருந்துகளை கூடுதலாக வழங்கும்படி, மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

அதன்படி, தமிழகத்திற்கு தடுப்பூசி மருந்துகளை, மத்திய அரசு வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று காலை, ஐதராபாதில் இருந்து சென்னை வந்த, 'ஏர் ஏஷியா' விமானத்தில், 16 பார்சல்களில், 75 டோஸ், 'கோவாக்சின்' தடுப்பூசிகள் வந்தன. அதேபோல, மும்பையில் இருந்து சென்னை வந்த, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில், 2 லட்சம் டோஸ், 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் வந்தன. இந்த தடுப்பூசி மருந்துகளை, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்று, அரசு மருந்து சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X