பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவலால் 92 விமானங்கள் ரத்து

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், விமான பயணம் மேற்கொள்வோருக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சென்னையில் இருந்து, வெளிமாநிலங்களுக்கு செல்லும் பயணியரின் எண்ணிக்கை நேற்று, 3,000 ஆகவும், வெளிமாநிலங்களில் இருந்து, சென்னைக்கு வரும்

சென்னை:தமிழகத்தில், குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், விமான பயணம் மேற்கொள்வோருக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து, வெளிமாநிலங்களுக்கு செல்லும் பயணியரின் எண்ணிக்கை நேற்று, 3,000 ஆகவும், வெளிமாநிலங்களில் இருந்து, சென்னைக்கு வரும் பயணியரின் எண்ணிக்கை, 2,000 ஆகவும் குறைந்தது.

மும்பை, டில்லி, ஐதராபாத், ஆமதாபாத், கொச்சி, இந்துார், அந்தமான், புவனேஸ்வர், மதுரை, திருச்சி, கோவா, விஜயவாடா, புனே, கவுஹாத்தி, கோவை, விசாகப்பட்டிணம், திருவனந்தபுரம் உள்ளிட்ட, 92 உள்நாட்டு விமான சேவைகள், இரு மார்க்கங்களிலும் நேற்று ரத்து செய்யப் பட்டன.சென்னையில் இருந்து நேற்று, 51 விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப் பட்டன. பல்வேறு நகரங்களில் இருந்து, 52 விமானங்கள் சென்னை வந்தன. சென்னைக்கு வந்து சென்ற பெரும்பாலான விமானங்களில், போதிய பயணியர் இன்றி, இருக்கைகள் காலியாக இருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X