கோர்ட் செய்தி

தமிழ்நாடு

முழு ஊரடங்கு அமல்படுத்த ஐகோர்ட்டில் வக்கீல் மனு

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலைகட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் பாலாஜிராம் என்பவர் தாக்கல் செய்த மனு:கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால், மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக, 2,000 டாக்டர்கள் தேவை. சிறுவர்,

சென்னை:தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலைகட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் பாலாஜிராம் என்பவர் தாக்கல் செய்த மனு:கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால், மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக, 2,000 டாக்டர்கள் தேவை. சிறுவர், இளைஞர், நடுத்தர வயதினர், வயதானவர்கள் என, அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

வைரஸ் பரவலை தடுக்க, 15 நாட்கள் முழு ஊரடங்கு தேவை; மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்; கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும்; இலவசமாக, 'ரெம்டெசிவிர்' மருந்தை வழங்க வேண்டும்; கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க வேண்டும்.இரவு நேர ஊரடங்கால் பயனில்லை. இரவு, 9:00 மணிக்கு மேல் துாங்கி விடுவர். பகல் நேரத்தில் தான், 95 சதவீதம் பேர் பணியில் உள்ளனர்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது; மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.எனவே, செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தில், உடனடியாக உற்பத்தி பணிகளை துவங்க உத்தரவிட வேண்டும். பஸ் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்.

தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, இன்று விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X