சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொற்று பரவல் வேகம் அதிகரிப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று மட்டும், 21 ஆயிரத்து, 228 பேர் பாதிக்கப்பட்டனர்; 144 பேர் இறந்தனர்.இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தில் உள்ள, 266 கொரோனா பரிசோதனை மையங்களில், நேற்று, 1 லட்சத்து, 40 ஆயிரத்து, 512 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.அதில், சென்னையில், 6,228;
 தொற்று பரவல் வேகம் அதிகரிப்பு

சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று மட்டும், 21 ஆயிரத்து, 228 பேர் பாதிக்கப்பட்டனர்; 144 பேர் இறந்தனர்.

இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தில் உள்ள, 266 கொரோனா பரிசோதனை மையங்களில், நேற்று, 1 லட்சத்து, 40 ஆயிரத்து, 512 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.அதில், சென்னையில், 6,228; செங்கல்பட்டில், 1,608; கோவையில், 1,509 உட்பட, மாநிலம் முழுதும், 21 ஆயிரத்து, 228 பேருக்கு தொற்று கண்டு அறியப்பட்டது.

இதுவரை, 2 கோடியே, 32 லட்சத்து, 38 ஆயிரத்து, 475 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 12 லட்சத்து, 49 ஆயிரத்து, 292 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் சிகிச்சை முடிந்து நேற்று, 19 ஆயிரத்து, 112 பேர் உட்பட, 11 லட்சத்து, 9,450 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது சென்னையில், 33 ஆயிரத்து, 222; கோவையில், 8,596; செங்கல்பட்டில், 9,663 என, ஒரு லட்சத்து, 25 ஆயிரத்து, 230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் நேற்று, 144 பேர் உட்பட, இதுவரை, 14 ஆயிரத்து, 612 இறந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X