பொது செய்தி

இந்தியா

இந்தியா - பிரிட்டன் வர்த்தகம் : ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
லண்டன் :இந்தியா-பிரிட்டன் இடையே, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள பிரிட்டன், இந்தியா உடனான வர்த்தக கூட்டுறவை மேலும் வலுப்படுத்த தீர்மானித்துள்ளது. இது குறித்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:இந்தியா - பிரிட்டன் இடையே,
 
இந்தியா - பிரிட்டன் வர்த்தகம் , ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு

லண்டன் :இந்தியா-பிரிட்டன் இடையே, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள பிரிட்டன், இந்தியா உடனான வர்த்தக கூட்டுறவை மேலும் வலுப்படுத்த தீர்மானித்துள்ளது.

இது குறித்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:இந்தியா - பிரிட்டன் இடையே, புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு திட்டங்கள் அமலுக்கு வர உள்ளன. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை, இந்திய நிறுவனங்கள், பிரிட்டனில் மேற்கொள்ள உள்ளன.


latest tamil news



அவற்றில் ஒன்றாக, 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும், சீரம் இன்ஸ்ட்டிட்யூட் நிறுவனத்தின், 2,400 கோடி ரூபாய் முதலீடும் அடங்கும். இந்நிறுவனம், தடுப்பூசி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை, பிரிட்டனில் அமைக்க உள்ளது. இதன் மூலம், 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே இந்தியா - பிரிட்டன் வர்த்தக முதலீடு தொடர்பாக, பிரதமர் மோடியுடன், பிரிட்டன் பிரதமர், போரிஸ் ஜான்சன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PV -  ( Posted via: Dinamalar Android App )
05-மே-202107:20:53 IST Report Abuse
PV vodafone பிரச்சனைக்கு தீர்வுகாணப்படுமா?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
05-மே-202102:11:15 IST Report Abuse
தல புராணம் மோடிக்கு நாட்டு நலனில் என்னவொரு அக்கறை பாருங்கள்.. இங்கே கோடிக்கணக்கான மருந்து தேவையாக இருக்கையில், இங்கே முனைப்பாக செயல்பட சொல்லாமல், இருக்குற தயாரிப்பாளரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு அங்கே லண்டனில் அவன் தொழிற்சாலை துவங்க இவரு நம்ம பணத்தை எடுத்து முன் பணம் கொடுத்திருக்கிறார்.. அவன் இங்கே இந்தியாவில் மருந்து மூணு மாசத்துக்கு வராதுன்னுட்டு அங்கே லண்டனில் மும்முரமா வேலை ஆரம்பிக்கிறான்.. போன வருடம் வர இருந்த மற்ற இரண்டு வேக்சின் நிறுவனங்களை விரட்டிய மோடி, இருந்த இரண்டில் ஒருவனையும் அங்கே அனுப்பி விட்டார்.. நம்ம கதி, அதோ கதி தானா ?? சங்கி பாய்ஸ், வாட் இஸ் யுவர் முட்டு பிளீஸ்??
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
05-மே-202102:04:53 IST Report Abuse
தல புராணம் // 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும், சீரம் இன்ஸ்ட்டிட்யூட் நிறுவனத்தின், 2,400 கோடி ரூபாய் முதலீடும் அடங்கும். இந்நிறுவனம், தடுப்பூசி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை, பிரிட்டனில் அமைக்க உள்ளது. // சீரம் கம்பெனிக்காரனுக்கு கடன் கொடுத்து, அரசு உதவியும் கொடுத்து, லண்டன் விசாவும் வாங்கி கொடுத்தது அதுக்கு தான்.. பொதுத்துறை நிறுவனங்களை மூடிட்டு, தனியாருக்கு கடனை கொடுத்து லண்டனுக்கு அனுப்பிட்டு.. நம்ம மக்கள் ஆக்சிஜனுக்கு மூச்சு முட்டி ராமா ராமான்னு சாக வேண்டியது. அதுக்கு கோவில் ரெடி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X