அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் மாவட்டத்தில் 4ம் இடத்தில் ம.நீ.ம., 

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதியிலும், ம.நீ.ம., வேட்பாளர்கள், நான்காம் இடத்தையே பெற முடிந்தது.திருப்பூர் மாவட்டத்தின் எட்டு தொகுதிக்கும் சேர்த்து, 66 ஆயிரத்து, 620 ஓட்டுக்களை ம.நீ.ம., கட்சி பெற்றது. முதல்முறை சட்டசபை தேர்தலில் ம.நீ.ம., களம் கண்டது. மாவட்டத்தின் எட்டு தொகுதியில் நேரடியாக போட்டியிட்டது. திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிகபட்சமாக, 19

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதியிலும், ம.நீ.ம., வேட்பாளர்கள், நான்காம் இடத்தையே பெற முடிந்தது.திருப்பூர் மாவட்டத்தின் எட்டு தொகுதிக்கும் சேர்த்து, 66 ஆயிரத்து, 620 ஓட்டுக்களை ம.நீ.ம., கட்சி பெற்றது.

முதல்முறை சட்டசபை தேர்தலில் ம.நீ.ம., களம் கண்டது. மாவட்டத்தின் எட்டு தொகுதியில் நேரடியாக போட்டியிட்டது. திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிகபட்சமாக, 19 ஆயிரத்து, 602 ஓட்டு பெற்றுள்ளது. குறைந்தபட்சமாக தாராபுரத்தில் இக்கட்சி, 2,130 ஓட்டுக்களை மட்டும் பெற்றுள்ளது.திருப்பூர் தெற்கில், 12 ஆயிரத்து, 898 ஓட்டு. பல்லடத்தில், 10 ஆயிரத்து, 227. அவிநாசியில், 8,379. உடுமலையில், 8,163, மடத்துக்குளத்தில், 2,894, காங்கயத்தில், 2,327 ஓட்டுக்களை ம.நீ.ம., பெற்றுள்ளது.

வடக்கில் அதிக ஓட்டுக்களை பெற்றாலும், நாம் தமிழர் கட்சியை (23 ஆயிரத்து, 110) கடந்து மூன்றாமிடத்துக்கு முன்னேற முடியவில்லை. இத்தொகுதியில் நான்காமிடத்தை ம.நீ.ம., பெற்றது. குறைந்த ஓட்டுக்களை (2,130) பெற்ற தாராபுரம் தொகுதியிலும் ம.நீ.ம., நான்காமிடமே பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X