பொது செய்தி

தமிழ்நாடு

புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:கடைகள் மூடல் உட்பட, பல்வேறு புதிய கட்டுப்பாடுகள், நாளை முதல் அமலுக்கு வருகின்றன.தமிழகத்தில் கொரோனா பரவல் தடுக்க, மே, 1 முதல், மறு உத்தரவு வரும் வரை, மாநிலம் முழுதும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், நாளை, 6ம் தேதி காலை, 4:00 மணி முதல் வரும், 20ம் தேதி காலை, 4:00 மணி வரையிலான புதிய கட்டுப்பாடுகளை நேற்று முன்தினம் இரவு தமிழக
 புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்

சென்னை:கடைகள் மூடல் உட்பட, பல்வேறு புதிய கட்டுப்பாடுகள், நாளை முதல் அமலுக்கு வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுக்க, மே, 1 முதல், மறு உத்தரவு வரும் வரை, மாநிலம் முழுதும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், நாளை, 6ம் தேதி காலை, 4:00 மணி முதல் வரும், 20ம் தேதி காலை, 4:00 மணி வரையிலான புதிய கட்டுப்பாடுகளை நேற்று முன்தினம் இரவு தமிழக அரசு அறிவித்தது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

அதன்படி, நாளை அமலுக்கு வரவுள்ள, புதிய கட்டுப்பாடுகள் விபரம்:

* அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள், அதிகபட்சம், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும்.

* பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பஸ்கள், அரசு பஸ்கள், வாடகை டாக்சி போன்றவற்றில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும், பொதுமக்கள் அமர்ந்து பயணிக்கலாம்.

* ஏற்கனவே பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க, ஏப்., 24 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பல சரக்குகள் மற்றும் காய்கறி கடைகள் மட்டும், 'ஏசி' வசதியின்றி, பகல், 12:00 மணி வரை இயங்கலாம். இவற்றில் ஒரே சமயத்தில், 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

* மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும், நாளை முதல் திறக்க தடை விதிக்கப்படுகிறது

* மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல, எந்த தடையுமின்றி செயல்படலாம்

* அனைத்து உணவகங்கள், பேக்கரிகளில், காலை, 6:00 முதல், 10:00 மணி; பகல், 12:00 முதல், 3:00 மணி; மாலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரை, பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

* தேநீர் கடைகள், பகல், 12:00 மணி வரை செயல்படலாம். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில், உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

* உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது

*திரையரங்குகள் செயல்படாது

* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில், 20 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை

* மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், அழகு நிலையங்கள் இயங்க, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி ஊரகப் பகுதிகளில் உள்ள, அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும் அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது

* சனிக்கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில், காலை, 6:00 முதல், பகல், 12:00 மணி வரை செயல்படலாம்

*முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட, அனைத்து நாட்களிலும், திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகள், ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்த, அதில் பங்கேற்க, எந்த விதமான தடையும் இல்லை.

இது தவிர ஏற்கனவே நடைமுறையில் உள்ள, கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் தொடரும். இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X