கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு சித்தா சிகிச்சை சிறப்பு பிரிவு துவங்க வழக்கு

Added : மே 04, 2021
Share
Advertisement
சென்னை:கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, ஆரம்ப சுகாதார நிலையங்களில், சித்தா மற்றும் ஹோமியோபதி பிரிவுகளை துவங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனு:கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு, அலோபதி மருந்துடன், இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம்,

சென்னை:கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, ஆரம்ப சுகாதார நிலையங்களில், சித்தா மற்றும் ஹோமியோபதி பிரிவுகளை துவங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனு:கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு, அலோபதி மருந்துடன், இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி சிகிச்சை அளிக்கலாம்.நோய் எதிர்ப்பு சக்திக்கு, இந்திய மருத்துவ முறை சிகிச்சை பலன் அளிக்கிறது.நுரையீரல் சிகிச்சைக்கு, துளசி மற்றும் சித்தரத்தை மிகவும் சிறந்தது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஹோமியோபதியில், 'ஆர்செனிக் ஆல்பம் -30' என்ற, மருந்து வழங்கப்படுகிறது. மத்திய அரசே, இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது.வைரஸ் தொற்றுக்கு சித்தா, ஹோமியோபதி சிகிச்சை அளிக்க, சிறப்பு பிரிவுகளை துவங்கும்படி, அரசுக்கு மனு அனுப்பினேன். உடனடியாக, ஆரம்ப சுகாதார நிலையங்களில், இந்த இரண்டு சிறப்பு பிரிவுகளையும் துவங்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X