அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களின் பரிதவிப்பை போக்குமா, புதிய அரசு?

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் நிறைவேறாத பாலம் பணி உட்பட, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பாலம் பணிகள் தடைபட்டுள்ளதை நிறைவேற்ற, புதிய அரசு வேகம் காட்ட வேண்டும். திருப்பூர் மாநகரம், நொய்யல் ஆறு மற்றும் ரயில்வே பாதையால், பிரிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து வசதியை மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம்.தி.மு.க., ஆட்சியின் போது, 2006-11ம் ஆண்டில், மணியகாரம்பாளையம்,
  மக்களின் பரிதவிப்பை போக்குமா, புதிய அரசு?

திருப்பூர் : பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் நிறைவேறாத பாலம் பணி உட்பட, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பாலம் பணிகள் தடைபட்டுள்ளதை நிறைவேற்ற, புதிய அரசு வேகம் காட்ட வேண்டும்.

திருப்பூர் மாநகரம், நொய்யல் ஆறு மற்றும் ரயில்வே பாதையால், பிரிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து வசதியை மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம்.தி.மு.க., ஆட்சியின் போது, 2006-11ம் ஆண்டில், மணியகாரம்பாளையம், காசிபாளையம், அணைப்பாளையம் பகுதிகளில், நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டது. கூலிபாளையம், வஞ்சிபாளையம் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.அணைக்காடு பகுதியில், ரயில்வே மேம்பாலம்; குமரன்ரோட்டின் குறுக்கே சுரங்கபாலம்; ஊத்துக்குளி ரோடு இரண்டாவது ரயில்வே கேட் பகுதியில், சுரங்கபாலம்; மண்ணரை கேட்டுத்தோட்டம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தி.மு.க., அறிவித்துச்சென்ற, காலேஜ் ரோட்டையும், மங்கலம் ரோட்டையும் இணைக்கும் பணியும் இதுவரை முடிந்தபாடில்லை. துவங்கிய பணிகள், பலமுறை கிடப்பில் போட்டதால், 10 ஆண்டுகளாக பணி நிறைவு பெறவில்லை.நெரிசலை குறைக்க, பி.என்., ரோட்டில், புஷ்பா தியேட்டர் முதல் பாண்டியன் நகர் வரையிலும், பல்லடம் ரோடு பழைய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சின்னக்கரை பிரிவு வரையிலும் பாலம் அமைக்க, திட்டமிடப்பட்டது. கடந்த, 10 ஆண்டுகளாக பாலம் பணிகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில், பல தவணைகளில் நடந்ததால், நகரின் நெரிசல் குறைந்தபாடில்லை.திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில், நொய்யல் ஆறு மற்றும் ரயில்வே பாதையின் குறுக்கே, கூடுதல் இணைப்பு பாலங்களை அமைக்க வேண்டும்.

பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு, பி.என்., ரோடுகளில், புதிய பறக்கும் பாலங்கள் அமைக்கவும், பழைய பாலம் பணிகளை, போர்க்கால அடிப்படையில் முடிக்கவும், புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க., அரசு சாட்டையை சுழற்ற வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X