பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி சுற்றுச்சூழல் ஆசிரியருக்கு

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : பள்ளி அளவில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான, சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்கும், பசுமைப்படை திட்டத்தினை செம்மையாக செயல்படுத்துவதற்கும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு முதுகலை

திருப்பூர் : பள்ளி அளவில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான, சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்கும், பசுமைப்படை திட்டத்தினை செம்மையாக செயல்படுத்துவதற்கும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு முதுகலை ஆசிரியர் வீதம் புதிதாக, 32 பணியிடங்களும், மாவட்டங்களிலுள்ள செயல்பாடுகளை கவனிக்க மற்றும் ஒருங்கிணைக்க, மாநில அளவில் ஒரு பணியிடமும் தோற்றுவிக்கப்பட்டது.இப்பணியிடங்களுக்கு கடைசியாக, 2018 முதல், 2020 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக பணியிடங்களுக்கு, மேலும் மூன்று ஆண்டுகள், தொடர் நீட்டிப்பு வழங்க, பள்ளி கல்வி இயக்குனர் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளார்.இக்கோரிக்கை பரிசீலனையில் உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு, உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் கடந்த ஏப். மாதத்திற்கான ஊதியம் வழங்குமாறு, மாவட்ட கருவூல அலுவலர்களுக்கு அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X