பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே ஸ்டேஷனில் பறக்காத தேசியக்கொடி

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன், 100 அடி கம்பத்தில், பிரமாண்டமாக தேசியக் கொடி கடந்தாண்டு பறக்க விடப்பட்டது. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவ்வப்போது கொடி சேதமடைவதும், பின்னர் மாற்றுவதும் தொடர் கதையாக இருந்து வந்தது.கடந்த மாதம் முதல் வாரம் கனமழை பெய்த போது, கொடி சேதமானதால், கம்பத்தில் இருந்து கழற்றப்பட்டது. ஒரு மாதம் கடந்தும் இன்னமும் புதிய

திருப்பூர் : திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன், 100 அடி கம்பத்தில், பிரமாண்டமாக தேசியக் கொடி கடந்தாண்டு பறக்க விடப்பட்டது.

காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவ்வப்போது கொடி சேதமடைவதும், பின்னர் மாற்றுவதும் தொடர் கதையாக இருந்து வந்தது.கடந்த மாதம் முதல் வாரம் கனமழை பெய்த போது, கொடி சேதமானதால், கம்பத்தில் இருந்து கழற்றப்பட்டது. ஒரு மாதம் கடந்தும் இன்னமும் புதிய தேசியக்கொடி கம்பத்தில் ஏற்றப்படவில்லை.ரயில்வே ஸ்டேஷன் அதிகாரி களிடம் கேட்ட போது,'ஒவ்வொரு முறை தேசிய கொடி பறக்கவிடும் போதும், அதிக ஒளிபாய்ச்சும் விளக்குகளில் (போக்ஸ்லைட்') உராய்ந்து கொடி சேதமாகிறது.

விளக்கை கம்பத்தில் இருந்து சற்று கிழே இறக்கி பொருத்திய பின், புதிய கொடி மீண்டும் பறக்கவிடப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X