பொது செய்தி

இந்தியா

கொரோனா அதிகரிப்பால் பீஹாரில் முழு ஊரடங்கு

Added : மே 04, 2021
Share
Advertisement
பாட்னா:கொரோனா பரவலை தடுக்க, பீஹாரில் இன்று முதல், 15ம் தேதி வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.இங்கு, கொரோனா இரண்டாம் அலையின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனால், வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், நடந்தது. முடிவில்,

பாட்னா:கொரோனா பரவலை தடுக்க, பீஹாரில் இன்று முதல், 15ம் தேதி வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.இங்கு, கொரோனா இரண்டாம் அலையின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனால், வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், நடந்தது. முடிவில், இன்று முதல், 15ம் தேதி வரை, முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த ஊரடங்கின் போது, மளிகை, காய்கறி, பழங்கள், இறைச்சி, பால் கடைகள் ஆகியவை காலை, 7:00 மணி முதல், 11:00 மணி வரை செயல்படும். மருத்துவமனைகள், வங்கிகள், ஏ.டி.எம்., மையங்கள் செயல்படும். கொரோனா பரிசோதனை, தடுப்பூசி பணிகள் தொடரும்.


ஆட்டோ டிரைவர்களுக்கு உதவி

டில்லியில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், 10ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில்,72 லட்சம்,'ரேஷன் கார்டு' தாரர்களுக்கு, இரு மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் மற்றும் ஆட்டோ, வாடகை கார் டிரைவர்களுக்கு, தலா, 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X