சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்பணம் கிடைக்கவில்லை 'இன்கோ' உறுப்பினர்கள் அவதி

Added : மே 04, 2021
Share
Advertisement
பந்தலுார் : பந்தலுார், 'இன்கோ' தேயிலை தொழிற்சாலையில் பசுந்தேயிலைக்கான விற்பனை விலை மற்றும் முன்பணம் கிடைக்காமல், உறுப்பினர்கள் அவதியடைந்து வருகின்றனர். பந்தலுார் இன்கோ தேயிலை தொழிற்சாலையில் 1,300 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் தினசரி பசுந்தேயிலை தொழிற்சாலைக்கு வினியோகம் செய்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக, 'தொழிற்சாலையில் பணமில்லை,' என்று கூறி முன் பணம்

பந்தலுார் : பந்தலுார், 'இன்கோ' தேயிலை தொழிற்சாலையில் பசுந்தேயிலைக்கான விற்பனை விலை மற்றும் முன்பணம் கிடைக்காமல், உறுப்பினர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

பந்தலுார் இன்கோ தேயிலை தொழிற்சாலையில் 1,300 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் தினசரி பசுந்தேயிலை தொழிற்சாலைக்கு வினியோகம் செய்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக, 'தொழிற்சாலையில் பணமில்லை,' என்று கூறி முன் பணம் மற்றும் 'அரியர்ஸ்' வழங்காமல், உறுப்பினர்களை திருப்பி அனுப்புகின்றனர். இதனால், அவர்கள் திண்டாடி வருகின்றனர்.நிர்வாகம் தரப்பில் கூறுகையில், 'கடந்த காலங்களில் தாய்கோ வங்கி, தொழிற்சாலைக்கு தேவையான பணத்தை கொடுத்து விட்டு, விற்பனை செய்யப்பட்ட தேயிலை துாளுக்கு பணம் கிடைத்ததும் அதனை வரவு வைத்து கொள்வது வழக்கமாக இருந்தது.

தற்போது வங்கி நிர்வாகம் ஒத்துழைக்காததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,' என்றனர். 'இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X