பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்கு

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : கொரோனாவில் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, வீடுகளுக்கு சென்று இலவச உணவு சேவை வழங்குபவரை பலரும் பாராட்டுகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், அறிகுறி உள்ளவர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகின்றனர். அவர்களுக்கு, பல்லடம் ரோடு, தென்னம் பாளையத்தில் உள்ள செட்டியார் மெஸ் சார்பில், மூன்று வேளையும்

திருப்பூர் : கொரோனாவில் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, வீடுகளுக்கு சென்று இலவச உணவு சேவை வழங்குபவரை பலரும் பாராட்டுகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், அறிகுறி உள்ளவர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகின்றனர். அவர்களுக்கு, பல்லடம் ரோடு, தென்னம் பாளையத்தில் உள்ள செட்டியார் மெஸ் சார்பில், மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் முத்துகிருஷ்ணன் கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. அதனால், நாங்கள் காலையில் இட்லி, மதியம் ஏதாவது ஒரு கலவை சாதம், இரவு இட்லி, தோசை ஆகியவற்றை வழங்கி வருகிறோம்.

உணவை டெலிவரி செய்ய, தன்னார்வலர்கள் உதவியை நாடியுள்ளோம். வீட்டு கண்காணிப்பில் உள்ளவரின் விபரங்களை மருத்துவமனை, கலெக்டர் அலுவலகத்தில் கேட்டுள்ளோம். இலவச உணவு வேண்டுவோர் 96777 34234 என்ற எண்களில் அழைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X