சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை சீரமைப்பு பணியில் சர்ச்சை பணியை தடுத்த பழங்குடியினர்

Added : மே 04, 2021
Share
Advertisement
கூடலுார் : கூடலுார், ஓவேலி குறிஞ்சிநகரில், சாலை சீரமைப்பு பணி துவங்கும் இடம் தொடர்பாக, எழுந்த சர்ச்சையால்,பணியை பழங்குடியினர் தடுத்து நிறுத்தினர்கூடலுார்,ஓவேலி குறிஞ்சி நகர் குடியிருப்பு பகுதிக்கு, ஒன்னாம்பாலம் பகுதியிலிருந்து, நாலாம் நம்பர் பகுதி வரை குறுக்கு பாதை செல்கிறது. இப்பாதையில், முதல் கட்டமாக, 400 மீட்டர் துாரம் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இதன்

கூடலுார் : கூடலுார், ஓவேலி குறிஞ்சிநகரில், சாலை சீரமைப்பு பணி துவங்கும் இடம் தொடர்பாக, எழுந்த சர்ச்சையால்,பணியை பழங்குடியினர் தடுத்து நிறுத்தினர்கூடலுார்,ஓவேலி குறிஞ்சி நகர் குடியிருப்பு பகுதிக்கு, ஒன்னாம்பாலம் பகுதியிலிருந்து, நாலாம் நம்பர் பகுதி வரை குறுக்கு பாதை செல்கிறது.

இப்பாதையில், முதல் கட்டமாக, 400 மீட்டர் துாரம் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 38 லட்சம் ரூபாய் மதிப்பில், 650 மீட்டர் துாரம் சாலை சீரமைக்கும் பணி துவங்கியது. இப்பணி, நாலாம் நம்பர் பகுதியில் இருந்து துவங்கியதால், அதிர்ச்சி அடைந்த பழங்குடி மக்கள் அப்பகுதியில் கூடினர். 'இங்கு ஏற்கனவே, சீரமைத்து நிறுத்தப்பட்ட பகுதியிலிருந்து பணியை துவங்க வேண்டும்,' என, வலியுறுத்தி, நேற்று காலை சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த, ஓவேலி பேரூராட்சி அதிகாரிகள், 'பழங்குடி மக்களின், கோரிக்கை, நிறைவேற்றப்படும்' என, உறுதி அளித்தனர். அதனை ஏற்று பழங்குடி மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X