சம்பவம் செய்தி

தமிழ்நாடு

494 பேருக்கு தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு  

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு நேற்று, 500-ஐ நெருங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், கடந்த, 3ல் கொரோனா பாதிப்பு, 27 ஆயிரத்து, 716 ஆக இருந்தது. நேற்று, 494 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, 28 ஆயிரத்தை எட்டியது. நேற்று பாதிப்புக்குள்ளானவருடன் சேர்ந்து இதுவரை, 28 ஆயிரத்து, 213 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.நேற்று

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு நேற்று, 500-ஐ நெருங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், கடந்த, 3ல் கொரோனா பாதிப்பு, 27 ஆயிரத்து, 716 ஆக இருந்தது. நேற்று, 494 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, 28 ஆயிரத்தை எட்டியது. நேற்று பாதிப்புக்குள்ளானவருடன் சேர்ந்து இதுவரை, 28 ஆயிரத்து, 213 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட, 550 பேருடன் சேர்த்து இதுவரை, 24 ஆயிரத்து, 924 பேர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று கோவையில் சிகிச்சை பெற்று வந்த, 63 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் பலியாகினார்.

இவருடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை, 244 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனையில், 3,045 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு ஏப்., மாத இறுதியில், 25 ஆயிரத்துக்கும் கீழ் இருந்தது. ஒரு வாரத்துக்குள், 2,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி, மாவட்ட பாதிப்பு, 28 ஆயிரத்தை எட்டியுள்ளது.எனவே, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை இடைவிடாது தொடருமாறு, மாவட்ட சுகாதார துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X